சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை இணையத்தில் கேள்வி கேட்பது என்பது நெட்டிசன்களுக்கு மிக பெரிய பொழுதுபோக்கு . சில நேரங்களில் அந்த பிரபலங்கள் அவர்களுக்கு தக்க பதிலும் கொடுத்து இருக்கிறார்கள் . ஓவர் நைட் ஒபாமாவாக தங்களை பீல் செய்து கொள்ளும் நெட்டிசன்களுக்கு கடந்த வாரம் யுவன் ஷங்கர் ராஜா தக்க பதில் கொடுத்தார். அன்றைய தினம் அது பரபரப்பாக பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது பிரியா பவானி ஷங்கர்-நெட்டிசன்கள் வாக்குவாதம் கடுமையாக களம் 8 ல்(இணையதளத்தில்) கடுமையாக போய்கொண்டிருக்கிறது. இப்போது அது வைரலாகவும் மாறிவிட்டது. ஆட்சி ஏற்பது தொடர்பாக, ஊடகத்தில் பணியாற்றிய போது, பிரியா பவானி ஷங்கர் பதிவிட்ட முந்தைய பதிவு ஒன்றை எடுத்து, அவரை ஒரு தரப்பிற்கு ஆதரவாளராக சித்தரிக்க நெட்டிசன் ஒருவர் முயற்சிக்க, அதற்கு பிரியா பதிலளித்து வருவது தான் இன்றயை ஷாட் டாபிக்.
‛பெரிய CID... ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிகையாளராக இருந்திருக்கேன். என் வேலையே அதுதான் இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் என பிரியா பதிலளிக்க, அவ்வளவு தான் அவருக்கு எதிரா ஒரு கோஷ்டி கோதாவில் இறங்கிட்டாங்க.
"சகோதரி முதல்வரை நேரடியா மக்கள் தேர்ந்தெடுக்கவே முடியாது... அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம். 2016 ல ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர். அப்புறம் முதல்வர் இறந்தால் ஆட்சி கவிழ்க்கணும்னு சட்டமும் கிடையாது". என்ற கேள்வி தான் பிரியா பாவானி ஷங்கரை கடுப்பேத்திய பதிவு.
அதோடு விட்டார பிரியா பவானி ஷங்கர், அடுத்தடுத்து தனை நோக்கி வரும் தோட்டாக்களுக்கு தக்க பதில் அளித்து வருகிறார்.
"take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை"
என்ற அவருடைய பதிலை நெட்டிசன்கள் ஏற்றதாக தெரியவில்லை. இன்னும் போய் கொண்டிருக்கிறது களம் 8 ல் கதாநாயகிக்கு எதிரான டுவிட் யுத்தம்.