பயணம் என்பது சிலருக்கு ஒரு பொழுதுபோக்கு. இதுவே சிலருக்கு ஒரு பெரிய சந்தோஷம் மற்றும் அமைதியை தரும் மருந்து. பொதுவாக வெளிநாடு பயணத்திற்கு நாம் அதிக செலவிட வேண்டியது பணமாக தான் இருக்கும். ஆனால் ஒரு 7 நாடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு செல்வதற்கு பணம் அதிகம் தேவைப்படாது. அந்த 7 நாடுகள் எவை? 


 


1.கம்போடியா:




கம்போடியா நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த அங்கோர் வாட் கோயில் உள்ளது. அத்துடன் அங்குள்ள கடற்கரையில் உள்ள பவளப்பாறைகள் மிகவும் ரம்மியமான தோற்றத்தை தரும். இந்தியாவின் ஒரு ரூபாய் அங்கு 54.89 கம்போடியா ரியால் என்பதால். 100 ரூபாய் செலவு என்றால் அந்த நாட்டு மதிப்பில் 5 ஆயிரம் ரியால். எனவே இங்கு இந்தியர்கள் பயணம் செய்ய செலவு மிகவும் குறைவாகும். 


 


2. இந்தோனேஷியா:




இந்தியாவிற்கு மிகவும் அருகிலுள்ள நாடு இந்தோனேஷியா. அந்தமான் தீவுகளுக்கு மிகவும் அருகில் உள்ளது இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு. இந்தோனேஷிய தீவுகளிலுள்ள கடற்கரை மற்றும் அதிலுள்ள பவளப்பாறைகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்தியாவின் ஒரு ரூபாய் மதிப்பு 195.4 இந்தோனேஷியா ரூபாயாக உள்ளது. இதனால் நாம் 100 ரூபாய் செலவு செய்தால் அந்நாட்டு மதிப்பில் அது 19540 இந்தோனேஷியா ரூபாயாக இருக்கும்.


 


3. லாவோஸ்:




லாவோஸ் நாட்டை சுற்றி நாடுகள் இருந்தாலும் அந்த நாட்டில் பௌத்த கலாச்சாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேலும் அங்கு உள்ள சந்தைகளில் கிடைக்கும் பொருட்கள் கண்களை கவரும் வகையில் இருக்கும். மேலும் இங்கு உள்ள இரண்டு தேசிய விலங்கு பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஒரு ரூபாய் இங்கு 127.14 லாவோஸ் கிப் ஆக உள்ளது. 


 


4. பராகுவே:




தென்அமெரிக்க கண்டத்தில் பிரேசில், போலிவியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு நடுவே அமைந்துள்ள நாடு பராகுவே. இங்கு இருக்கும் பாலாசியோ டி லோபஸ் பகுதி சுற்றுலா பயணிகளின் முக்கிய இடமாக அமைந்துள்ளது. அத்துடன் இங்கு கிடைக்கும் உணவுகளும் சுற்றுலா பயணிகளை பெரிது ஈர்க்கும் வகையில் இருக்கும். இந்தியாவின் ஒரு ரூபாய் மதிப்பு அங்கு 89.03 பராகுவே கரானி ஆக உள்ளது. 


 


5. கொலம்பியா:




தென் அமெரிக்க கண்டத்தில் மற்றொரு சுற்றுலா நாடு என்றால் அது கொலம்பியா தான். இங்கு அமேசான் காடுகள் பகுதி சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும். அத்துடன் ஆண்டிஸ் மலைப் பகுதியிலுள்ள இடங்களும் சுற்றுலா பயணிகளிக்கு இயற்கை விருந்தாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஒரு ரூபாய் மதிப்பு அங்கு 51.46 கொலிம்பியா பேசோ ஆக உள்ளது. 


 


6. ஜிம்பாப்வே:




ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள ஜிம்பாப்வே நாட்டில் காடுகள் சஃபாரி செல்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேலும் இங்கு இருக்கும் விக்டோரியா நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும்.  இந்தியாவின் ஒரு ரூபாய் மதிப்பு இங்கு 4.8 ஜிம்பாப்வே டாலர் ஆக உள்ளது.


 


7. ஶ்ரீலங்கா:




இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று ஶ்ரீலங்கா. இங்கு இருக்கும் கடற்கரை மற்றும் இயற்கை வளங்கள் பலரை சுற்றுலாவிற்கு ஈர்க்கும். போர் காலங்கள் முடிவடைந்த பிறகு இலங்கை நாடு அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. தமிழர்களுக்கு இலங்கை பயணம் ஒரு சிறப்பான சுற்றுலாவாக அமையும். இந்தியாவின் ஒரு ரூபாய் மதிப்பு அங்கு 2.8 ஶ்ரீலங்கா ரூபாய் ஆக உள்ளது.