நயன்தாரா பாணியில் பிரியா பவானி சங்கர் .


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்  .




செய்தி வாசிப்பாளராக தொடங்கி , சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இளைஞர் மத்தியில் இவருக்கு வரவேற்பு அதிகம் .




தற்பொழுது நடிகர் அதர்வா உடன் குருதி ஆட்டம் , ஷங்கர் மட்டும் கமல் ஹாசனின் இந்தியன் 2 , ஹரிஷ் கல்யாணுடன் ஓமணப்பெண்ணே போன்ற படங்களை நடித்து வருகிறார் ஒரு சில படங்கள் ரீலீசிற்கு தயாராக உள்ளது . இந்நிலையில்,  நயன்தாரா பாணியில் பிரியா பவானி சங்கர் தொடர்கிறார்.  ஐரா படத்தை இயக்கிய சர்ஜூன் இந்த படத்தை இயக்குறார் .




கதாநாயகியை மய்யமாக வைத்து எடுக்க இருக்கும் ஒரு திரில்லர் படம் என்று கூறப்படுகிறது . பிரியா பவானிசங்கர் டிவி ரிப்போட்டர் ஆக நடிக்கிறார் .மெட்ரோ சிரிஷும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறாராம்.யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் .படப்பிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர் .