சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 277க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.4 ஆயிரத்து 260க்கு விற்கப்படுகிறது. அதேபோல, ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று ரூ.34 ஆயிரத்து 216க்கு விற்கப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.34 ஆயிரத்து 080க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை இன்று குறைந்துள்ளது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
ஆனால், வெள்ளி விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.70க்கு நேற்று விற்கப்பட்டது. இன்று 20 பைசா அதிகரித்து கிராமுக்கு ரூ.69.90க்கு விற்கப்படுகிறது. இதேபோல, ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.69 ஆயிரத்து 700க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.200 அதிகரித்து ரூ.69 ஆயிரத்து 900க்கு விற்கப்படுகிறது.