இயக்குநர் அட்லீக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் அளவுக்கு வெறுப்பாளர்கள் கூட்டமும் அதிகம். அவர் பழையபடங்களின் ஒன்லைனரை வைத்துத் தனது படங்களை உருவாக்குகிறார் என்கிற தொடர் குற்றச்சாட்டை அவர் மீது வைத்துவருகிறார்கள் இந்த கூட்டத்தினர். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் அட்லீ குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் ப்ரியா அட்லீ.
ப்ரியா அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் அட்லி வெறுப்பாளர்களைப் பற்றியும் உங்களைப் பற்றியும் நீங்கள் சொல்ல விரும்புவது எது? என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு,
"எங்கள் மீது இன்னும் அதிகமாக அன்பு செலுத்துவதற்கு நன்றி. அன்பைப் பரப்புவோம்" என பதில் அளித்துள்ளார்.
முன்னதாக கைதி திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் மீது அட்லீயைப் போலக் கதையைத் திருடுகிறார் என கமெண்ட்கள் வந்த நிலையில் ப்ரியா அட்லீயின் இந்த பதில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தை இயக்கிய அட்லீ, தற்போது ஷாரூக்கான் நயன்தாரா நடிப்பில் இந்தியில் திரைப்படத்தை இயக்க உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.