ஒரு பெண்ணின் தனது வாழ்க்கையில்  கடந்து செல்லும்  அழகான தருணம் கர்ப்பகாலம். இந்த காலக்கட்டதில் உடல் மற்றும் மனதளவில் பெண்கள் நிறைய மாற்றங்களையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும். மனதளவில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதனை சமாளித்து மீண்டுவிடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. கர்ப்பகாலத்தில்  பெண்கள் பின்பற்றும்  உணவு முறைகள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அப்படியே பிரதிபலிக்கும். எனவே முறையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது .அந்த வகையில் கோடை காலங்களில் எந்த பழங்களை கர்ப்பிணிகள் எடுக்க வேண்டும், எடுக்க கூடாது என்று சில வழிமுறைகள் கீழே தொகுத்துள்ளோம்.




கோடையில் கர்ப்பிணிகள் எடுக்க வேண்டிய பழங்கள்:



  • கோடைக்காலங்களில் அதிக அளவில் நீரேற்றத்துடன்  இருக்க வேண்டியது அவசியம் . குறிப்பாக கர்ப்பகாலத்தில் முக்கியமான செயல்பாடாக  இது பார்க்கப்படுகிறது. எனவே தர்பூசணி மற்றும் முலாம் பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவை நீரேற்ற உயர்வை ஊக்குவிக்கும்.

  • அடுத்ததாக ஆப்பிள் பழங்களை எடுத்துக்கொள்ளலாம் இதல் உள்ள இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து குழந்தையில் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

  • விட்டமின் சி அடங்கிய பழங்களை கோடையில் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக எலுமிச்சை, ப்ளம்ஸ், கிவி  மற்றும் கொய்யாப்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்வது சிறப்பு.  இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்

  • கர்ப்பகாலத்தில்  கால் வலி அதிகமாக ஏற்படும் இதனை தடுக்க வாழைப்பழம் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இது தவிற  மாம்பழம் மற்றும் அவகாடோ போன்ற பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

  • கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு தீர்வாக  அத்திப்பழம், கொடி முந்திரி , ஊர வைத்த பாதம் போன்றவை செயல்படுகின்றன.

  • இஞ்சியை சேர்த்துக்கொண்டால் வாந்தி, மயக்கம், குமட்டல் உள்ளிட்டவற்றில் இருந்து ஆறுதலளிக்கும்.



தவிர்க்க வேண்டிய பழங்கள் :



  • நாள் ஒன்றிற்கு 2 அல்லது 3 பழங்களை மட்டுமே  சாப்பிட வேண்டும்.அதிக வெப்பம் கொடுக்கும் பழங்களை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • பப்பாளி மற்றும் அண்ணாசிப்பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழம், திராட்சை,தர்பூசணி, வாழைப்பழம், முலாம் பழம் உள்ளிட்ட பழங்களை அதிக அளாவில் எடுக்கக் கூடாது. இது ரத்ததின் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே கவனம் தேவை 



 


கர்ப்பிணிகள் அருந்த வேண்டிய குடிபானங்கள்:


கோடைக்காலங்களில் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே இயற்கையாக கிடைக்கும் இளநீர், எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம் . இது எதுவுமே கிடைக்கவில்லை என்றால் சுத்தமான குடிநீரை அடிக்கடி அருந்துவதன் மூலம் உடல் நீரேற்றம் அடையும். புட்டிகளில் அடைக்கப்பட்ட பானங்களை அருந்தக்கூடாது


 


அவசியமாக பின்பற்ற வேண்டியது?



  • உணவுகளை பிரித்து ஐந்து வேளையாக சாப்பிட வேண்டும்.

  •  உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும், நாக்கு வறட்சியாக கூடாது.

  • முட்டை , பால் , தயிர் போன்ற கொழுப்பு உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும்

  • பதப்படுத்தப்பட்ட உணவு பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை சாப்பிட கூடாது.

  • தேனீர், காஃபி போன்றவை குழந்தை வளர்ச்சிக்கு நல்லதல்ல எனவே அதற்கு பதிலாக பழச்சாற்றினை பருகலாம்.

  • புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடாது.