கோலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரின்ஸ்’ திரைப்படம்
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் பிரின்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகிவரும் இப்படத்தை அனுதீப் கே வி இயக்குகிறார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நாட்டை சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷாப்கா என்பவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
பொதுவாக சிவகார்திகேயன் படம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு சிவகார்த்திகேயன் என்றால் கொள்ளை பிரியம். எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும், மக்களை மகிழ்விப்பதையே குறிக்கோளாக கொண்டிருப்பவர் சிவா. அந்த வகையில் தான் தற்போது பிரின்ஸ் படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள மரியா ரியாபோஷாப்கா, உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான சில சீரீஸ்களில் நடித்துள்ளார். இதைத் தவிர சில ஹிந்தி படங்களிலும் தலைகாட்டியுள்ளார். பிரின்ஸ் படத்தில் நடித்துள்ள இவருக்கு, படம் வெளியாவதற்கு முன்னதாகவே இவருக்கு பல ரசிகர்கள் கூடி விட்டனர்.
விரைவில் வெளியாகிறது முதல் சிங்கிள்!
பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு வேளைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த அப்டேட் வெளியாகும் என முன்னரே தெரிவிக்கப்பட்டது. அதே போல இன்று, படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகிவரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இதனால் படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகளை ஸ்டார் குழுமம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.