நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள  ‘பிரின்ஸ்’ படத்தின் இரண்டாம் பாடலை வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


 


பாடலை கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:


https://www.jiosaavn.com/song/jessica/H1wzdRpab1w?referrer=svn_source%3Dshare&svn_medium=com.twitter.android&utm_source=share&utm_medium=com.twitter.android


 






தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப்  இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.  தமன் இசையமைக்கும் பிரின்ஸ் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியீடாக அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இந்நிலையில் பிரின்ஸ் படத்தில் முதல் பாடல்  கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிம்பிலிக்கி பிலாக்கி என தொடங்கும் அந்த பாடலை விவேக் எழுதியிருந்தார். இசையமைப்பாளர் அனிருத், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி ஆகியோர் இப்பாடலை பாடியிருந்தனர். இதுதொடர்பான பாடல் வரிகள் அடங்கிய வீடியோவில் சிவகார்த்திகேயனின் டான்ஸ் அனைவரையும் கவர்ந்தது. 






இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் 2 ஆம் பாடலாக ஜெஸிக்கா பாடல் வெளியாகியுள்ளது.முன்னதாக இந்த பாடல் மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த நேரத்துக்கு வெளியாகவில்லை.இதனால் கடுப்பான ரசிகர்கள் மீம்ஸ்கள் மூலம் சரமாரியாக படக்குழுவினரை விமர்சித்தனர் இந்த பாடல் பெரிதும் தங்களை கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.