Premji Marriage: பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் வெளியீடு.. ஜூனில் நல்ல தேதி பாத்தாச்சு.. ரசிகர்கள் உற்சாகம்!

Premji Wedding Invitation : நடிகர் பிரேம்ஜி மற்றும் இந்துவின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களை எடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் கங்கை அமரன். அவரின் மூத்த மகன் வெங்கட் பிரபு பிரபலமான இயக்குநராக இருக்க, அவரின் இளைய மகன் பிரேம்ஜி அமரன் நடிகராகவும் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் கலக்கி வருகிறார். இதுவரையில் சிங்கிளாக கலக்கி வந்த பிரேம்ஜியிடம் ரசிகர்களால் அதிக அளவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி "எப்போ திருமணம்?" என்பது தான். 

Continues below advertisement

 


பிரேம்ஜியின் திருமணம் குறித்த கேள்விக்கான பதிலை பல ஆண்டுகாலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளார் பிரேம்ஜி. ஆம் நடிகர் பிரேம்ஜிக்கு வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்ற அழைப்பிதழை போஸ்ட் செய்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் இந்து என்பவருடன் ப்ரேம்ஜிக்கு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரின் இந்த திருமண அழைப்பிதழ் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

 


வல்லவன் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான பிரேம்ஜி, அதைத் தொடர்ந்து சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, கோவா உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து இருந்தார். திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும், பாடகராக சில பாடல்களையும் பாடியுள்ளார். ஒரு சில படங்களில் அவரின் வசனங்கள் பெரிய அளவில் ட்ரெண்டிங்காகி  இன்றுவரை மீம்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.   “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா?”,  “என்னக் கொடும சார் இது?” உள்ளிட்ட வசனங்களை இன்று பலரும் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. 

சில மாதங்களுக்கு முன்னர் 45 வயதான பிரேம்ஜி, 23 வயதான இளம் பாடகியை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என சில வதந்திகள் பரவி வந்தன. அந்த வதந்திகளை எல்லாம் பொய்யாக்கும் விதமாக தற்போது அவரின் திருமண அழைப்பிதழ் பதிலளித்துள்ளது. அவரின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

Continues below advertisement