உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன். இவர் நடிப்பில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இந்தியன் திரைப்படம். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசனின் அரசியல் பயணம் உள்ளிட்ட பல காரணங்களால் படம் தாமதமானது. 

Continues below advertisement

நாளை மறுநாள் இசை வெளியீட்டு விழா:

இந்த சூழலில், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் பாரா படல் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதனால், கமல் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியன் படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நிறுத்தப்பட்டதும், இந்தியன் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம், கமல்ஹாசனால் அரசியல் பயணம் காரணமாக தொடர்ந்து நடிக்க முடியாத காரணம், ராம்சரண் படத்தை இயக்க ஷங்கர் சென்ற காரணத்தாலும் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

Continues below advertisement

ரிலீஸ் எப்போது?

இதையடுத்து, மீண்டும் முழுவீச்சில் இந்தியன் 2 படத்தை இயக்கும் பணியை ஷங்கர் கையில் எடுத்தார். இதையடுத்து, இந்தியன் 2 படத்தின் பெரும்பாலான பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்தின் பணிகளை முழுவீச்சில் முடித்து இந்தியன் 2 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஷங்கருடன் இணைந்து ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். நீண்ட ஆண்டுகளாகவே படப்பிடிப்பில் இருந்த இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் நாளை மறுநாள் நடைபெற இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, லஞ்சம் வாங்குவது குற்றம் என்ற அடிப்படை கதையை கொண்டு 1996ம் ஆண்டு ஷங்கர் இந்தியன் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசனின் இந்தியன் தாத்தா கெட்டப் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அந்த படத்தில் நடித்த நடிகர்களில் கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் நடிக்கிறார்களா? என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.