Premalu on OTT: ஓடிடி தளத்தில் வெளியானது “பிரேமலு” படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பிரேமலு படம் முதலில் மலையாளத்தில் மட்டும் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியானது. தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Continues below advertisement

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

கிரிஷ் A.D இயக்கத்தில் உருவான  இந்தத் திரைப்படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டிருந்தார். 

மேலும் சங்கீத் பிரதாப்,அகிலா பார்கவன்,ஷியாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான் மற்றும் K S பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேத்யூ தாமஸ், சியாம் புஷ்கரன் கேமியோ கேரக்டரில் தோன்றினர்.GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத்துக்கு செல்லும்  பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் வாழ்க்கையை சுற்றி பிரேமலு அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு சச்சின் ஐடி துறையில் பணிபுரியும் ரீனுவைச் சந்திக்கிறான். நண்பர்களாகும் நிலையில் சச்சின் ரீனுவை ஒருதலையாகக் காதலிக்க ஆரம்பிக்க, அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் ஒட்டுமொத்தப் படமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் முதலில் மலையாளத்தில் மட்டும் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியானது. தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தமிழிலும் இரு வாரங்கள் கழித்து டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

வசூலிலும் ரூ.100 கோடியை தாண்டி மாஸ் காட்டிய பிரேமலு படம் இரண்டு மாதங்கள் கழித்து ஒருவழியாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படத்தை காணலாம். மலையாளம், தமிழ், இந்தி மொழியில் மட்டுமே ஓடிடி தளத்தில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரேமலு படத்தின் தெலுங்கு பதிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: DeAr Movie Review: குறட்டை பிரச்சினை.. சிக்கலில் கணவன் - மனைவி உறவு.. “டியர்” படத்தின் விமர்சனம் இதோ!

Continues below advertisement