Apple Iphoen Spyware: ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், உங்களது ஐபோன் உளவுபார்க்கப்பட்டால் அதனை உறுதி செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


ஐபோன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை:


இஸ்ரேலின் NSO குழுமத்தால் உருவாக்கப்பட்ட பிரபல Pegasus  உள்ளிட்ட,  அதிநவீன உளவு செயலிகள் மூலம் இந்தியா உள்ளிட்ட 92 நாடுகளைச் சேர்ந்த ஐபோன் பயனாளர்கள் கண்காணிக்கப்படலாம் என ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பை சமரசம் செய்யும் இரகசிய இணையத் தாக்குதல்களில் இருந்து,  தனது பயனர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.


ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை என்ன?


பாதுகாப்பு மீறல் தொடர்பான தகவல்களை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படும் தனது பயனாளர்களுக்கு, ஆப்பிள் நிறுவனம் மெயில் மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி, ”உங்கள் ஆப்பிள் ஐடி -xxx- உடன் தொடர்புடைய ஐபோனை தொலைவிலிருந்து சமரசம் செய்ய முயற்சிக்கும் கூலிப்படையின் ஸ்பைவேர் தாக்குதலால் நீங்கள் குறிவைக்கப்படுகிறீர்கள் என்பதை ஆப்பிள் கண்டறிந்துள்ளது. நீங்கள் யார் அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் காரணமாக இந்த தாக்குதல் உங்களை குறிவைத்து இருக்கலாம். இத்தகைய தாக்குதல்களைக் கண்டறியும் போது முழுமையான உறுதியை அடைய முடியாது என்றாலும், இந்த எச்சரிக்கையில் ஆப்பிள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.  தயவுசெய்து இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என எச்சரித்துள்ளது. அறியப்படாத அல்லது சந்தேகத்திற்குரிய செயலிகள் உடனான இணைப்புகளைத் தவிர்ப்பதன் மூலம்,  பயனர்கள் எச்சரிக்கையுடன் செயல்படலாம் Apple இன் தகவல்தொடர்புத்துறை வலியுறுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டால், குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆப்பிள் தரப்பில் கூறப்படுகிறது.


பெகாசஸால் கண்காணிப்பதை கண்டறிவது எப்படி?



  • பெகாசஸ் அதன் மேம்பட்ட திறன்களுக்காக அறியப்படுகிறது.  இது வழக்கமான பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளால் கண்டறிய முடியாததாக உள்ளது. இருப்பினும், மொபைல் சரிபார்ப்பு கருவித்தொகுப்பு (MVT) மூலம் இத்தகைய ஸ்பைவேரைக் கண்டறிவது சாத்தியமாகும்.  

  •  அதன்படி, உங்கள் ஐபோன் உளவுபார்க்கப்படுவதை உறுதிசெய்ய உங்களுக்குத் நன்கு தெரிந்த (மற்றும் நம்பும்) தொழில்நுட்பம் அல்லது இணையப் பாதுகாப்பை அணுகுவது மிகவும் நல்லது

  • Pegasus இன் உளவு நடவடிக்கைகளின் வரம்பு ஆபத்தானது என்றாலும், அதன் அதிக செயல்பாட்டு செலவுகள் காரணமாக சாதாரண நபர்களை இலக்காக்குவதற்கான வாய்ப்புகள் குறவே. இது பெரும்பாலும் குறிப்பிடத்தக்க அரசியல், பத்திரிகை அல்லது சமூக செல்வாக்கு கொண்ட தனிநபர்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களான காங்கிரஸின் சசி தரூர், ஆம் ஆத்மியின் ராகவ் சதா, மற்றும் திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பெகாசஸ் மூலம் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.