எம்.எஸ் தோனி என்ற பெயர் எந்தவொரு நபருக்கும் அறிமுகப்படுத்த தேவையில்லை. உலகம் முழுவதும் இவரது பெயர் மிகவும் பெயர் பெற்றது. இந்தியாவிற்காக அனைத்து ஐசிசி கோப்பையையும் பெற்று கொடுத்த ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி. 


இதுபோக, ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக தலைமை தாங்கி 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024ல் இந்தியா முழுவதும் உள்ள எந்த ஸ்டேடியத்திலும் தோனி களமிறங்கினாலும், ரசிகர்களின் சத்தத்தால் ஸ்டேடியமே அதிரும். இப்படியே தோனிக்காக ஸ்டேடியமே அதிர்ந்த நிலையில், தோனியையே அதிர வைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 


சமீபத்தில் எம்.எஸ்.தோனியின் முன்னாள் பிசினஸ் பார்ட்னரான மிஹிக் திவாகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு காரணம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திவாகர் தற்போது ஆர்கா ஸ்போர்ஸ் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


என்ன நடந்தது..?


ராஞ்சியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மிஹிக் திவாகருக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி கிரிமினல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். எம்.எஸ்.தோனி கொடுத்த அந்த புகாரில், கிரிக்கெட் அகாடமிகளை அமைப்பதற்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லாமல் தனது பெயரை பயன்படுத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடுத்த அதிகாரம் ரத்து செய்யப்பட்ட போதிலும், திவாகர் தனது பெயரை பயன்படுத்தி இந்தியாவிலும், பிற நாடுகளில் பல கிரிக்கெட் அகாடமிகளை திறந்துள்ளார். இது தவிர, எம்.எஸ்.தோனி கிரிக்கெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்காக திவாகர் ரூ. 15  கோடி மோசடி செய்துள்ளார். திவாகர் இயக்குனராக இருக்கும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ஒப்பந்தத்தின்படி ஒரு குறிப்பிட்ட உரிமை கட்டணத்தையும், பங்கு லாபத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மீறப்பட்டது. என தெரிவிக்கப்பட்டது. 


இதையடுத்து, ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 406, 420,467,468,471 மற்றும் 120B பிரிவுகளின் கீழ் தோனி, ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோர் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளார். 


ராஞ்சியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் திவாகருக்கு எதிராக பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியால் அதிகாரப்பூர்வ கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 


ஐபிஎல் 2024ல் தோனியின் தனித்துவமான சாதனை: 


இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். தோனி, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் 2024ல் விளையாடியதன் மூலம், 42 வயது மற்றும் 259 நாட்களில், ஐபிஎல் விளையாட்டில் விளையாடிய இரண்டாவது வயதான இந்திய வீரர் என்ற சாதனையை எம்.எஸ்.தோனி படைத்தார். 


ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இந்த சாதனையில், அதிகபட்சமாக 200 க்கு மேல் பெற்ற ஒரே வீரர் அவர்தான். ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வழிநடத்திய விராட் கோலி மொத்தம் 168 சிக்ஸர்களுடன் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.