மொழிகளின் எல்லைகளை உடைத்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற லவ் காமெடி படம்தான் ”பிரேமலு” திரைப்படம். சமீபத்தில் தென்னிந்தியாவில் அதிகமாக கொண்டாடப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
அனைத்து தரப்பு மக்களாலும் அதிகம் விரும்பப்பட்டு, மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வருகின்றனர். இப்படி காமெடி படமான பிரேமலு, ஒருவேளை த்ரில்லர் மூவியாக வந்தால், எப்படி இருக்கும் என்று அனந்து ரகுநாத் என்பவர் எடிட் செய்து பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் படத்தை விட பட்டையை கிளப்பி வருகிறது.
ட்ரைலர் போன்று வெளியான இந்த வீடியோவில் காதல் மற்றும் சிரிப்பு நிறைந்த பிரேமலு ஒரு மர்ம த்ரில்லராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை எடிட் செய்துள்ள அனந்து, சிறப்பாக எதையும் செய்யவில்லை. வசனங்களை புதிதாக சேர்க்கவும் இல்லை. பிரேமலுவில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரங்கள், அவர்கள் பேசிய உரையாடர்களை வைத்தே வித்தியாசமாக மாற்றியுள்ளார். இதன்மூலம், வசனங்களும் காட்சிகளும் இடத்திற்கு ஏற்றாற்போல் அமைத்து படத்தின் உணர்வையே மாற்றியுள்ளார்.
இதற்குமுன் பிரேமலு படத்தை பார்க்காதவர்கள் ஒருவேளை இந்த புதிதாக எடிட் செய்த ட்ரைலரை பார்த்தால், த்ரில்லர் படம் என்றே நம்பிவிடுவார். அந்த அளவிற்கு ட்ரைலரில் அனந்து என்பவர் ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பாக செதுக்கியுள்ளார். இதன்மூலம் எடிட்டர் நினைத்தால் காமெடி ஜாலியான திரைப்படத்தை த்ரில்லர் ட்ரைலராக உருவாக்க முடியும் என்பதை இந்த வீடியோ நிரூபிக்கிறது.
இதையடுத்து, அனந்து என்பவர் எடிட் செய்த இந்த வீடியோவுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. காமெடி - காதல் நிறம்பிய ஒரு படத்தை ஒன்றரை நிமிடத்தில் மிஸ்டரி த்ரில்லராக மாற்றிய சாதனை தங்களையே சாறும் என அனந்துவை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவேற லெவல் எடிட்டிங் என்றும், எடிட்ரிங் டேபிளில் இருந்துதான் ஒரு படம் பிறக்கிறது என்று கூறுவது உண்மை என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வீடியோ லிங்க் கீழே..
பிரேமலு:
மலையாளத்தில் வெளியாகி பரபரப்பான ஹிட்டான "பிரேமலு" திரைப்படம் மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தை தெலுங்கில் எஸ்எஸ் ராஜமௌலியின் மகன் எஸ்எஸ் கார்த்திகேயா விநியோகம் செய்தார். நஸ்லென் கே. கஃபூர், மமிதா பைஜு, ஷியாம் மோகன், அகிலா பார்கவன் மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து, பிரேமலு திரைப்படத்தின் 2ம் பாகம் 2025ல் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
படத்தின் முன்னணி நடிகர்களான நஸ்லென் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளனர். அசல் படத்தை இயக்கிய கிரீஷ் ஏடி இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் ஃபகத் பாசில், எழுத்தாளர்-இயக்குனர் திலீஷ் போத்தன் மற்றும் எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.