தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிற மொழி  நடிகைகள்


பிற மொழியில் இருந்து தமிழ் படங்களில் நடிக்க வந்து பல நடிகைகள் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளாக மாறி இருக்கிறார்கள். இந்து கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் தமன்னா , காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நடிகைகள் பிற மாநிலத்தில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர்கள். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் அந்த வகையில் சமீபத்தில் இந்தி , தெலுங்கு , கன்னடம் படங்களில் நடித்த பல புதுமுக நடிகைகள் தமிழுக்கு அறிமுகமாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகிறார்கள்.


ருக்மினி வசந்த் , க்ரித்தி ஷெட்டி , மீனாக்‌ஷி செளதரி , ஸ்ரீ கெளரி பிரியா , அபர்ணா தாஸ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும் அந்த வரிசையில் சமீபத்தில் ஒரே படத்தின் மூலம் அதிகப்படியான ரசிகர்களை தன் கைக்குள் போட்டுக்கொண்டவர் மமிதா பைஜூ 


மமிதா பைஜூ


பிரேமலு படத்தில் தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜூ தற்போது சென்சேஷனலான நடிகையாக வலம் வருகிறார்.  முன்னதாக பாலாவின் வணங்கான் படத்தில் மமிதா நடிக்க இருந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து அவர் விலகினார், இதனைத் தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் நடித்து இந்த ஆண்டு வெளியான ரெபல் படத்தில் நாயகியாக நடித்தார். பெரியளவில் எதிர்பார்ப்புகளுடன் வெளியான ரெபல் படத்தில் மமிதா பைஜூவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் அவர் வெறும் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து போவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இப்படியான நிலையில் தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தில் மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல்கல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.






மமிதா பைஜூவுக்கு தமிழகத்தில் எவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பிற்காக சென்னை வந்த மமிதா பைஜூவை ரசிகர்கள் அவரிடம் செல்ஃபீ கேட்டு  கூட்டம் கூட்டமாக சூழ்ந்துகொள்ள அந்த இடத்தில் இருந்து அவரை பாதுகாப்பாக நகர்த்துவதற்கு பாதுகாவலர்கள் பெரும்பாடு பட்டுவிட்டார்கள். தமிழில் முன்னணி நடிகையாக வலம வருவதற்கு முன்பே அவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. ஒரு சில ஹிட் படங்களில் கோலிவுட் சினிமாவில் அவர் முன்னணி நடிகையாக வந்துவிடலாம் என சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.