WB Lok sabha Election 2024 Result: மேற்குவங்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவ தேர்தலில், பாஜகவை பின்னுக்கு தள்ளி பெரும்பாலான தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 10.50 நிலவரப்படி, மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 13 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி 2 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 


மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, தேர்தலுக்கு பிறகு வெளியான கருத்துகணிப்புகள் பெரும்பாலும், பாஜகவே பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்தன. ஆனால், கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தற்போது, பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 


நட்சத்திர வேட்பாளர்கள் பின்னடைவு:


கிருஷ்ணாநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மஹுவா மொய்த்ரா 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட அம்ரிதா ராய் முன்னிலை வகிக்கிறார். அதேபோன்று, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரான, யூசஃப் பதானும் பரம்பூர் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.


கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, பாஜக 19 முதல் 23 இடங்களையும், திரிணாமுல் 19 முதல் 22 இடங்களையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) 22 இடங்களைக் கைப்பற்றியது.  அதே நேரத்தில் பாஜக 18 இடங்களை வென்று இரண்டாவது இடத்தை பிடித்தது.  இந்திய தேசிய காங்கிரஸ்  2 இடங்களை கைப்பற்றியது.