பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் (Heart of Stone) என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஐரோப்பாவில் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய மனைவி ஆலியாவை அன்புடன் வரவேற்க ரன்பீர் கபூர் மும்மை விமான நிலையத்தில் காத்திருந்தது அனைவராலும் பாரட்டப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறது. ரசிகர்கள் இதை சமூக வலைதளங்களில் பகிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஐரோப்பாவிலிருந்து இந்தியா வரும் தனது மனைவி ஆலியாவை வரவேற்க காரில் காத்திருக்கும் வீடியோ அனைவரின் மனதையும் ஈர்த்தது வருகிறது. மேலும், ரன்பீரைக் கண்டதும் ஆலியும் அவரை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.
ஐகானிக் கணவந் மனைவியாக வளம்வரும் நட்சத்திரங்களில் ஆலியாவும், ரன்பீர் சிங் இருவரும் அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள். இந்நிலையில், இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு ரசிகர்களிடையே மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலியா பட்- ரம்பீர் சிங் தம்பதியினர் சமீபத்தில் தங்கள் வாழ்க்கையில் விரைவில் சின்னஞ்சிறு குழந்தை வர இருப்பதாக அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் ஆலியாவிற்கும் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆலியா பட் - ரன்பீர் கபீர் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டத்திற்குரியதுதான்.