‛என்ன சந்தானம் சார் ஒரு ரவுண்டு வர போறீங்க போல...’ சாண்டா15 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Santa#15 First look poster : சாண்டா #15 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 31, விநாயகர் சதுர்த்தி வெளியாகும் என்று ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

Continues below advertisement

Santa # 15 : ஒரு ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் படம் பார்க்க நீங்க ரெடியா? விரைவில் வருகிறது சாண்டா # 15 

Continues below advertisement

தனித்துவமான நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் சந்தானம். அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தூள் கிளப்பியவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து பிறகு பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். தற்போது தனது 15வது படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். 

சாண்டா #15 : 

கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. தற்போது இந்த படத்தில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விட்டது என்பதை தாது ட்விட்டர் பக்கத்தில் அடிகாரபூர்மாக அறிவித்துள்ளார் நடிகர் சந்தானம். மேலும் ஒரு நகைச்சுவையான பொழுதுபோக்கு நிறைந்த ஜாலியான திரைப்படமாக இது இருக்கும். 

 

வெளியாகிறது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:

இந்த சாண்டா #15 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அந்த வகையில் தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 31, விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ட்விட்டர் பதிவு மூலம் அறிவித்துள்ளனர் படக்குழுவினர். 

 

இப்படத்தில் நடிகர் சந்தானம் ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் ராகினி திவேதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் பிரபலமான இசையமைப்பாளரான அர்ஜுன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். 

தொடர்ச்சியாக நான்கு படங்கள் :

நடிகர் சந்தானம் நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் மற்றும்  குலு குலு ஆகிய இரண்டு படங்களும் சமீபத்தில் தான் திரையரங்குகளில் வெளியாகின.  நீண்ட காலமாக தள்ளி போய் கொண்டு இருந்த "சர்வர் சுந்தரம்" திரைப்படமும் தற்போது ரிலீசிற்கு தயாராக உள்ளது. சர்வர் சுந்தரம் திரைப்படம் டிசம்பர் 2022ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். நடிகர் சந்தானத்தின்  நான்கு படங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படுவது குறித்து  ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.  

 

    

Continues below advertisement