தமிழ் சினிமா என்றாலே ரஜினி-கமல் என இரண்டு துருவங்கள்தான் என நினைத்திருந்தவர்களுக்கு தான் 'துருவ நட்சத்திரம்' என நினைவூட்டியவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி என்றால் லாஜிக்கை மீறிய ஸ்டைல் வகையறா கமர்ஷியல் சினிமாக்கள், கமல் என்றால் திகட்டத் திகட்ட காதல் ரொமான்ஸ் என இருந்த தமிழ் சினிமாவில் மண்வாசம், அதிரடி ஆக்‌ஷன், சிவந்த கண்களுடன் பொறிபறக்க வசனங்கள் என விஜயகாந்தை ’சி’ செண்டர்களுக்கான சூப்பர் ஸ்டாராக்கியது. காங்கிரஸின் மதுரை மாவட்ட நிர்வாகியான அழகரின் மகனான விஜயராஜ்தான் பின்னாளில் விஜயகாந்த் ஆனார். 


இவரது பெயரை மாற்றியவர் தயாரிப்பாளர் எம்.ஏ.காஜா. 1979ல் இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் அந்தப் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். தூரத்து இடி முழக்கமும், சட்டம் ஒரு இருட்டறையும் அவரை ஹீரோவாக்கியது.


சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த விஜயகாந்த் பின்னர் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்தார். தற்போது உடல்நிலை பிரச்சினை காரணமாக அரசியலில் இருந்தும், சினிமாவில் இருந்தும் சற்று தள்ளியே இருந்தாலும், விஜயகாந்தின் என்றும் பசுமையான திரைப்படங்களை இன்று பார்த்தாலும் கூஸ்பம்ஸ் மொமண்டாகவே இருக்கும். அப்படியான அவரது படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.


ALSO READ | Liger Movie Review: மனோகரா... எம்.குமரன் S/O மகாலட்சுமி... அப்டேட் வெர்சனா லைகர்? படம் முடிந்ததும் முதல் விமர்சனம்!


ரமணா:
முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படம் அனைவருக்குமே ஆல்டைம் பேவரைட். தனக்கென டீமை உருவாக்கி அவர்களை வைத்து ஊழலில் திளைப்பவர்களை பழிவாங்கும் தலைவனாக விஜயகாந்த் நடித்திருப்பார். மன்னிப்பு தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை எனக்கூறி படத்தை அனைவருக்குமே பிடிக்க வைத்திருப்பார் நம்ம கேப்டன்.


ஊமை விழிகள்:
அரவிந்தராஜ் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஊமை விழிகள். இப்படத்தில் விஜயகாந்த், அருண் பாண்டியன், கார்த்திக், சந்திரசேகர் ,ரவிச்சந்திரன், ஜெய்ஷங்கர், மலேஷியா வாசுதேவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். ஒரு கல்லூரி பெண்ணின் மர்ம மரணத்தில் தொடங்கும் இந்தப்படம் சூப்பர் த்ரில்லர் மூவி. பட்டிப்பார்த்து தட்டிவிட்டால் இன்று கூட ஒரு வெற்றிப்படமாக ஓடக்கூடிய இன்வெஸ்டிகேஷன் திரைப்படம்தான் ஊமை விழிகள்.




சட்டம் ஒரு இருட்டறை:
நடிகர் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளியான திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. தொழிலதிபரின் கொலை, அதனை தொடர்ந்து மூவரின் ஜெயில்தண்டனை, பின்னர் பழிவாங்கல் நடவடிக்கை என வழக்கமாக இருந்தாலும் கெட்டவர்களை சட்டத்தை வைத்தே பழிவாங்கும் பக்கா கோர்ட் திரைப்படமாக இருக்கும் சட்டம் ஒரு இருட்டறை.


கேப்டன் பிரபாகரன்:
செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன். இது அவரின் 100வது திரைப்படம். இப்படம் 1991ம் ஆண்டு வெளியானது. படம் தொடங்கி அரைமணி நேரம் ஹீரோவே வராமல் பின்னர் போலீஸ் ஸ்டேஷன் சண்டைக்காட்சி மூலம் எண்ட்ரி கொடுப்பார் விஜயகாந்த். அந்தக்காட்சிக்காகவே திரையரங்குக்கு மீண்டும் மீண்டும் சென்றார்களாம் ரசிகர்கள். அந்த அளவுக்கு மாஸான எண்ட்ரியாகவும், வெற்றிப்படமாகவும் அமைந்தது கேப்டன் திரைப்படம்
 
சேதுபதி ஐபிஎஸ்
பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சேதுபதி ஐபிஎஸ். பள்ளிக்குழந்தைகளை பிணைக்கைதியாக பயங்கரவாதிகள் பிடித்துவைக்க அவர்களை எப்படி ஒரு மாஸ் போலீஸ் அதிகாரி காப்பாற்றுகிறார் என்பதே சேதுபதி ஐபிஎஸ். இப்படம் 1994ம் ஆண்டு வெளியானது


வைதேகி காத்திருந்தாள்
 1984 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் விஜய்காந்தை வேறு முகத்தில் காட்டியது. துப்பாக்கி, போலீஸ் என ஸ்ட்ரிக்ட் ஆபிஷராகவே பார்த்து பழக்கப்பட்ட விஜயகாந்தை காதலிலும், சோகத்திலும் மூழ்கடிக்க வைத்திருப்பார் சுந்தர்ராஜன்.




சின்னகவுண்டர்:


ஆர். வி. உதயகுமார் இயக்கிய இந்த திரைப்படம் 1992ம் ஆண்டு வெளியானது. தாயைக்காப்பாற்றிய தெய்வானையை திருமணம் செய்ய தூதுவிடுவார் சின்ன கவுண்டர். பின்னர் திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கும்போது அடுத்தடுத்த சம்பங்கள் சின்ன கவுண்டரை குறித்து தவறான எண்ணத்தை தெய்வானையிடம் உண்டாக்கும். அது சுபமாக முடியும் திரைப்படமே சின்ன கவுண்டர்.


வானத்தைப்போல
விக்ரமனின் வழக்கமான பக்கா குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக வெளியானது வானத்தைப்போல. இப்படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அண்ணன் தம்பி பாசத்துக்கு இன்றும் எடுத்துக்காட்டாக சொல்லப்படும் படம் என்றால் இதுதான். அந்த அளவுக்கு செண்டிமெண்ட்டை அள்ளித்தூவி இருப்பார் விக்ரமன்.


சத்ரியன்
சுபாஷ் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான திரைப்படம் சத்ரியன். விஜய்காந்தின் மற்றுமொரு சூப்பர் போலீஸ் திரைப்படம்தான் சத்ரியன். இப்படத்தில் விஜயகாந்த், பானுப்ரியா, ரேவதி, திலகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 


செந்தூரப்பூவே
1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செந்தூரப்பூவே. இப்படத்தை பி.ஆர்.தேவராஜ் இயக்கினார். வித்தியாசமான கெட்டப்பில் சிவந்த கண்களுடன் கெத்து காட்டி இருப்பார் விஜயகாந்த். இப்படம் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை விஜயகாந்துக்கு வாங்கிக்கொடுத்தது