அந்தகன்


டாப்ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். சிம்ரன் , பிரியா ஆனந்த் , கார்த்திக் , ஊர்வசி , சமுத்திரகனி , கே.எஸ் ரவிக்குமார் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இபடத்தில் நடித்துள்ளார்கள். இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்ததுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவாகி இருக்கும் அந்தகன் நடிகர் பிரசாந்தின் கம்பேக் படமாக அமையும் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


அந்தகன் கதை


பியானோ இசைக் கலைஞரான பிரசாந்த் ஒரு பரிசோதனை முயற்சியாக பார்வை இல்லாதவராக நடிக்கிறார். அவரை நிஜமாகவே பார்வை இல்லாதவர் என நினைத்துக் கொள்ளும் பிரியா ஆனந்த் தனது கஃபேவில் பியானோ வாசிக்கும் வேலை வாங்கி தருகிறார். பிரசாந்த் பியானோ வாசிப்பதை பார்த்து தனது திருமண நாளில் தன் மனைவிக்காக பிரசாந்தை பியானோ வாசிக்க சொல்கிறார் நடிகர் கார்த்திக். கார்த்திக் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சிம்ரன் தனது காதலனான சமுத்திரகனியுடன் இருப்பதை பார்த்து விடுகிறார். இதனால் சிம்ரன் கார்த்திக்கை போட்டுத்தள்ளுகிறார்.


இதை  பார்த்த பிரசாந்த் கண் தெரியாதவர் போலவே அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார். ஆனால் பின் பிரசாந்திற்கு கண் தெரியும் என்கிற உண்மை தெரிய வர அவரையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் சிம்ரனும் அவர் காதலனாக வரும் சமுத்திரகனியும். இவர்களிடம் இருந்து பிரசாந்த் எப்படி தப்பிக்கிறார் என்பதே அந்தகன் அல்லது அந்தாதுன் ஆகிய இரு படத்தின் கதையும்.


அந்தகன 3 நாள் வசூல்


சினிமா பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் அந்தகன் படத்தின் வசூல் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி அந்தகன் படம் முதல் நாளில் இந்தியளவில் 65 லட்சம் வசூல் செய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக  ரூ1.19 கோடி வசூலித்ததாகவும் 3 ஆவது நாளில் 1.15 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் மூன்று நாட்களில் அந்தகன் படம் இந்தியளவில் 2.99 கோடி வசூலித்துள்ளது.  விமர்சன ரீதியாகவும் படம் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் தற்போது வசூல் ரீதியாக சிறப்பான ரிஸல்ட் கொடுத்து வருகிறது.


பாதிக்குமா அந்தகன் வசூல்


வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விக்ரம் நடித்துள்ள தங்கலான் மற்றும் டிமாண்டி காலணி , ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. இதில் டிமாண்டி காலணி மற்றும் தங்கலான் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படங்கள் வெளியானால் அந்தகன் படத்தின் வசூலில் சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.