சலார்


கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர் பிரஷாந்த் நீல் . தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் சலார். பிரபாஸ் , ஷ்ருதி ஹாசன், ப்ரித்விராஜ் சுகுமாறன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஹாம்பேல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது . தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கும்  சலார் திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வசூல் வேட்டை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.


சலார் வசூல்






சலார் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு சலார் திரைப்படம் மிகைப்படுத்தப் பட்டதாகவும் கே.ஜி எஃப் படத்தைப் போல் படம் இல்லை என்கிற அதிருப்தியும் இருக்கிறது. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்கள் சலார் படத்தை கொண்டாடி வருகிறார்கள். சலார் படத்தின் வெற்றி சரிந்து வந்த பிரபாஸின் மார்கெட்டை மீண்டும் சிகரம் ஏற்றியிருக்கிறது. மேலும் சலார் படத்தின் முதல் நாள் வசூல் இந்த ஆண்டு வெளியான அனைத்து படங்களையும் பின்தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒரே நாளில் சலார் திரைப்படம் உலகளவில் ரூ.178 கோடி வசூல் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இரண்டாவது நாளாக ரூ.117 கோடி வசூல் செய்து வெறும் இரண்டே நாட்களில் ரூ.300 கோடியை தொட்டுள்ளது. மேலும் நேற்றோடு மூன்றாவது நாளாக சலார் திரைப்படம் ரூ.400 கோடி வசூல் செய்துள்ளது.


 


மேக்கிங் வீடியோ






சலார் படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரு விஷயம் என்றால் இந்தப் படத்திற்காக உருவாக்கப் பட்டிருக்கும் பிரம்மாண்டமான செட். கான்ஸார் என்கிற கற்பனை உலகம் ஒன்றை உருவாக்க கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான உழைப்பை செலுத்தி இருக்கிறது படக்குழு. தற்போது சலார் படக்குழு இணையதளத்தில் சலார் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த வீடியோவில் படத்தின் பிரதானமாக இடம்பெற்ற ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப் பட்ட விதம் மற்றும் இன்னும் நிறைய காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சலார் படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை இணையதளத்தில் பரவலாக ஷேர் செய்து வருகிறார்கள்.




மேலும் படிக்க :  Karthigai Deepam: கார்த்தியை சந்தித்த தீபா.. சிதம்பரத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்று..!


GP Muthu: சென்னைக்கு உதவ முடியல.. தூத்துக்குடி மக்களுக்கு உதவ களம் கண்ட ஜி.பி.முத்து - குவியும் பாராட்டு