இயக்குநர் சுசி கணேசனின் அறிமுகப்படமாக வெளியான ஃபைவ் ஸ்டார் திரைப்படம் இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த படம் நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா இருவருக்கும் முதல் படமாகும். 


2002 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி இந்த படமானது வெளியானது. இதில் பிரசன்னா, கனிகா, கிருஷ்ணா, மங்கை, சந்தியா பிரகாஷ், விஜயன், சிட்டி பாபு, ஸ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் ஃபைவ் ஸ்டார் படத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீராம் பரசுராம், அனுராதா ஸ்ரீராம் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் கீழ் இந்த படத்தை தயாரித்திருந்தார். 


படத்தின் கதை 


ஃபைவ் ஸ்டார் படத்தின் கதையானது பிரசன்னா, கிருஷ்ணா, இளங்கோ, சந்தியா பிரகாஷ், கார்த்திக் ஆகிய 5 நண்பர்களை சுற்றியது. ஒரே கல்லூரியில் படிக்கும் இவர்கள்  பட்டப்படிப்பு முடிந்தவுடன் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அங்கு, கிருஷ்ணாவுக்கு கண்டிப்பான தந்தை விஜயனின் கட்டாயத்தால் கனிகாவுடன் திருமணம் நடக்கிறது. 5 நண்பர்களும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த நிலையில் அவர்களுக்கு கிருஷ்ணாவின் கல்யாண விவகாரம் தெரிய வருகிறது. இதனால் அவர் டிரான்ஸ்ஃபர் வாங்கி கொண்டு மும்பை செல்வதாக சொல்லி விட்டு எங்கேயோ செல்கிறார். ஆனால் யாருக்கும் மணப்பெண் யாரென்று தெரியவில்லை. 


இதனிடையே ஆறு வருடங்கள் கழித்து பிரசன்னா மற்றும் கார்த்திக் இருவரும் சந்தியா பிரகாஷ், இந்திராவை சந்திக்க ரயில் பயணம் செய்கிறார்கள். அப்போது அதே ரயிலில் குழந்தையுடன் பயணம் செய்யும் கனிகாவை கண்டதும் தனது நண்பன் கிருஷ்ணாவின் மனைவி என தெரியாமல் காதல் கொள்கிறான். ஆனால் கனிகாவின் கதை தெரிய வரவும், கிருஷ்ணாவை நண்பர்கள் முயற்சியால் தேடி  கண்டுபிடிக்கிறான். அங்கு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. உண்மை தெரிந்த விஜயன் தற்கொலை செய்கிறார். 


இதற்கிடையில் கிருஷ்ணா பற்றி யோசிப்பதை விட மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர முடிவெடுக்கும் கனிகாவுக்கு குடும்பத்தினர் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அவரோ தன்னுடைய வாழ்க்கையை தானே தீர்மானித்துக் கொள்வதாக கூறி பிரசன்னாவை திருமணம் செய்ய சுபம் போட்டு முடிந்தது இப்படம். 


ஒரே படத்தில் அறிமுகமான பிரபலங்கள் 



  • இயக்குநர் சுசிகணேசனுக்கு இதுதான் முதல் படம். ஆனால் நீண்ட கால தயாரிப்பால் முதலில் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் படம் வெளியானது. 

  • நடிகை கனிகா “ஈஸ்வரி” என்ற கேரக்டரில் அறிமுகமானார். இந்த படத்தின் நியாபகமாகவே எதிர்நீச்சல் சீரியலில் அவரது கேரக்டர் பெயர் ஈஸ்வரியாக அமையப் பெற்றது. 

  • பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் பரசுராம் ஆகியோர் இசை அமைப்பாளர்களாக அறிமுகமானார்கள்.

  •  ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் முதல் படமும் ஃபைவ் ஸ்டார் தான். 




மேலும் படிக்க: LEO Trailer: விஜய்யின் லியோ ட்ரைலர் இந்த சேனலில் மட்டும்தான்! - வெளியான முக்கிய அறிவிப்பு