தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். 2011ம் ஆண்டு வெளியான 'உதயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் 'சகுனி', சூர்யாவுடன் 'மாஸ்' உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நடிகைக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்து இருந்தாலும் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காதல் ஜொலிக்க முடியாமல் போனது. ஆனால் மற்ற மொழிகளில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்ததால் அதில் பிஸியாகிவிட்டார். 


 



 


2022ம் ஆண்டு திடீரென பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜூவை என்பவரை திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாள் காதலரை பெற்றோரின் சம்மதத்துடன் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இது அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக்காக இருந்தது. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே அர்னா என்ற பெயரில் அழகான பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பிரணிதா கர்ப்பமாக உள்ளார். 


சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அவ்வப்போது கணவர், மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வார். அந்த வகையில் தற்போது தன்னுடைய பேபி பம்ப்பை காட்டும் படி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்து கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். "இரண்டாவது சுற்று... இந்த பேண்ட் எனக்கு பத்தவில்லை" என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் வேளையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் அட்வைஸ்களையும் தெரிவித்து வருகிறார்கள்.


 







இடையில் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட பிரணிதா சுபாஷ் சமீபத்தில் 'ரமணா அவதாரா' என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார். விகாஸ் மற்றும் வினய் பம்பதி இயக்கத்தில் வெளியான இந்த காமெடி கலந்த ரொமான்டிக் ட்ராமா படத்தில் ரிஷி, ஸுப்ரா ஐயப்பா, அருண் சாகர், அனிருத் ஆச்சார்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் மலையாளத்தில் 'தங்கமணி' என்ற படத்திலும் நடித்திருந்தார். 


தன்னுடைய இரண்டாவது பிரசவத்திற்காக நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க உள்ளார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடர்வார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.