மலையாள திரையுலகின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் மோகன்லால். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இந்தியா முழுவதும் உண்டு. இவரது மகன் பிரணவ் மோகன்லால். இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆதி என்ற மலையாள படத்தில் ஆதித்ய மோகன் என்ற கதாபாத்திரம் மூலமாக நடிகராக திரையுலகில் அறிமுகமானார்.
இந்த நிலையில், பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ஹிருதயம் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஹிருதயம் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 18-ந் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, ஹிருதயம் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இன்று நள்ளிரவு வெளியாக உள்ளது. இதற்காக பிரணவ் மோகன்லாலின் ரசிகர்களும், மோகன்லாலின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
முன்னதாக, வினித் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிருதயம் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் பிரணவ் மோகன்லாலுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மேலும், தர்ஷணா ராஜேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா பெருந்து தொற்று காலத்திலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மலையாள திரையுலகிற்கு மகிழ்ச்சி அளித்தது.
மேலும் படிக்க : Valimai: ரெடியாகுங்க.. ஓடும் வேனில் மாஸ் காட்டும் அஜித்... வெளியான புது ‘வலிமை’ வீடியோ...!
இந்த நிலையில், ஹிருதயம் படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதற்கு பிரணவின் ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது முறையல்ல என்றும், இது ஆரோக்கியமான போக்கல்ல என்றும் திரைத்துறையைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர், பாடலாசிரியர், பாடகர் என்று பன்முகத்திறன் கொண்ட பிரணவ் கடந்த 2018ம் ஆண்டு ஆதி என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இருபத்தியொன்னாம் நூட்டாண்டு, மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Tom Holland: அட்வெஞ்சர் அப்டேட்: அன்னைக்கு மட்டுமே அவ்வளவு அடி பட்டுச்சு.. மனம் திறந்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலந்த்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்