நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திரயான்-3 விண்கலம் அனுப்பிய புகைப்படம் என பகிர்ந்த கேலிச்சித்திரம் பற்றி நெட்டிசன்கன் விமர்சித்த நிலையில், பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.


சந்திரயான் -3 பற்றி பிரகாஷ் ராஜ் டிவீட்


தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -3 கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இது நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.  இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் விண்கலத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படம் பற்றி கேலிச்சித்திரம் ஒன்றை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 


டிவீட்டில், நபர் ஒருவர் சுற்றி வளைத்து டீ ஆத்தும் கார்ட்டூன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ப்ரேக்கிங் செய்தி, விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்” என பதிவிட்டிருந்தார். 



 


நெட்டிசன்கள் விமர்சனம்


பிரகாஷ் ராஜின் டிவீட் பா.ஜ.க,. மோடி ஆகியோரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர். மேலும், விஞ்ஞானிகளின் உழைப்பை கேவலப்படுத்துவதோடு மதிப்பற்ற வகையில் டீவீட் உள்ளதாக பலரும் கமெண் செய்து வந்தனர். கண்மூடித்தனமான வெறுப்பு இவர்களை நாட்டின் சாதனைகளைக் கூட காண விடாமல் செய்கிறது” என்றும், “சந்திரயான் 3 இஸ்ரோவால் அனுப்பப்பட்டது பாஜகவால் அல்ல” என்றும் நெட்டிசன்கள் கடுமையாக பிரகாஷ் ராஜின் பதிவுக்கு விமர்சனங்களை முன்வைத்தனர். அவரின் டிவீட்டிற்கு பலரும் கமெண்ட் செய்தனர். 


“பா.ஜ.க. அரசின் அவலங்களை அவர் தோலுரிப்பதை பொறுக்க முடியாமல் பலர் இருக்கிறார்கள்” எனவும் மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர். பிரகாஷ் ராஜை பலரும் கடுமையாக விமர்சித்த நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.



பிரகாஷ் ராஜ் விளக்கம் 


இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ள ட்வீட்டில்,” “வெறுப்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு மட்டுமே தெரியும். அவர்கள் அதை மட்டுமே பார்ப்பார்கள். கேரள டீக்கடைக்காரை கொண்டாடும் வகையிலான ‘ஆர்ம்ஸ்ட்ராங் டைம்ஸ்’ ஜோக்கைதான் நான் குறிப்பிட்டேன். இது உங்களுக்கு ஜோக் ஆக தெரியவில்லை என்றால் அந்த ஜோக்கே உங்கள் மீதுதான். வளருங்கள். #justasking “ என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார்.






யார் இந்த சாய்வாலா?


கேராளவில் கே.ஆர்.விஜயன் அவரது மனைவியுடன் டீ கடை நடத்தி வந்தார். இவர் டீ வியாபாராம் செய்ததn மூலம் உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றார். பயணங்கள்  மீதான இவரின் காதல் காரணமாக பிரமலமானார். பின்னர், இவருக்கு ஸ்பான்ஷர்ஷிப் கிடைத்தது. 71 வயதில் இவர் உயிரிழந்தார்.