கங்குவா


சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியானது. திரையரங்கில் வெளியாகிய முதல் நாள் முதலே கங்குவா படம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. முன்னதாக சூர்யா நடித்த அஞ்சான் படம் பெரியளவில் பில்டப் கொடுக்கப்பட்டு சொதப்பியது போலவே இந்த முறையும் எக்கச்சக்கமான பில்டப் படக்குழு சார்பில் கொடுக்கப்பட்டு படம் வசூலில் பல அடிகளை வாங்கியது. 


ஆஸ்கருக்கு போட்டியிடும் கங்குவா


திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான கங்குவா படம் ஒரு சில தரப்பிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது தான் என்றாலும் சூர்யாவின் கரியரில் தோல்வி பட பட்டியலில் கங்குவா இடம்பெற்றுள்ளது. இப்படியான நிலையில் தான் பலருக்கு ஆச்சரியமளிக்கும் தகவல் ஒன்று சமீபத்தில் வெளியானது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் சயின்சஸ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க தகுதியான படங்களை அறிவித்துள்ளது. மொத்தம் 207 படங்களை அவர்கள் அறிவித்துள்ளனர். அதில் தமிழில் இருந்து நடிகர் சூர்யாவின் கங்குவா படம் இடம்பிடித்துள்ளது. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இன்னும் சில இதை விமர்சிக்கவும் செய்தார்கள். 


கங்குவா படத்தை தாக்கிய பிரதீப் ரங்கநாதன்


அந்த வகையில் கோமாளி , லவ் டுடே படத்தின் இயக்குநரும் எல்.ஐ.கே , டிராகன் ஆகிய படங்களின் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கங்குவா படத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் தற்போது டிராகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் அறிவிப்பை ப்ரோமோ மூலமாக வெளியிட்டது படக்குழு. இந்த ப்ரோமோவில் பிரான்ஸ் , ஸ்விஸ் , வெனிஸ்  எல்லாம் வந்திருக்கோம். நாம் ஏன் இந்த படத்தை ஆஸ்கருக்கு வந்திர கூடாது என்று சொல்கிறார். பெரிய பட்ஜெட் பெரிய லொக்கேஷன் என்றாலே ஆஸ்கருக்கு போட்டியிடலாம் என்கிற் மனநிலையை ட்ரோல் செய்யும் விதமாக அமைந்த இந்த வசனம் கங்குவா படத்திற்கு அப்படியே பொருந்துவதாக நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகிறார்கள்.