பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மை டியர் பூதம் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெயிலருக்கு கீழே இதுவரை சுமார் 1500 கருத்துக்களை ரசிகர்கள் தங்களது கமெண்டுகளாக பதிவிட்டுள்ளனர். இவற்றில் ஏறத்தாழ சுமார் 1300 கருத்துக்கள் படம் வெற்றி பெறுவதற்காக பல்வேறு சங்கங்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக உள்ளது.


உதாரணத்திற்கு, தி டெவில் என்பவர் “ இரவெல்லாம் விழித்திருந்து பகலில் குறட்டை விட்டு தூங்கும் ரசிகர்கள் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்”  என்று பதிவிட்டுள்ளார். கிஷோர் என்பவர்                    “ஸ்பைடர்மேன் ஆண்டி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.




90ஸ் கிட்ஸ்களின் பரிதாப நிலையை சுட்டிக்காட்டும் விதமாக ப்ரணவ் என்பவர் “திருமணமாகாதா வி.ஐ.பி. ஆக வாழும் பாவப்பட்ட 90ஸ் கிட்ஸ் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். ராஜேஷ் ராக்கர்ஸ் என்பவர் “வீடியோ பார்க்கும்போது கமெண்டை வாசிக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”  என்று பதிவிட்டுள்ளார்.


வினோத்குமார் என்பவர் “ஸ்லிப்பிங் சூப்பர்ஸ்டார் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். நவீன் என்பவர் “எவனோ ஒருவன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதுபோன்று ஒவ்வொருவரும் வேடிக்கையாக மை டியர் பூதம் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளனர். சமீபகாலமாக, யூ டியூப்பில் வெளியாகும் அனைத்து படங்களின் டீசர், டிரெய்லர்கள் கீழேயும் இதுபோன்றுதான் கருத்துக்களை ரசிகர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். 




திரைப்படங்களை பிரபலப்படுத்துவதற்காகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த சில வருடங்களாக யூ டியூப்களில் படத்தின் முதல் போஸ்டர், படத்தின் டீசர், படத்தின் டிரெய்லர், படத்தின் மேக்கிங் காட்சிகள், படத்தின் ப்ளூப்பர் காட்சிகள் என்று பலவிதமாக படக்குழுவினர் விளம்பரப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


அவ்வாறு வெளியிடப்படும் படங்களின் டிரெய்லர், டீசர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும், விமர்சனங்களையும் அந்த வீடியோவிற்கு கீழே கருத்துக்களாக தெரிவிப்பது வழக்கம். தற்போது, படங்களை விளம்பரப்படுத்துவதற்காக வெளியிடப்படும் டிரெய்லர்கள், டீசர்கள் மற்றும் பாடல்களுக்கு விதவிதமான ரசிகர்கள் சங்கங்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பது ட்ரெண்டாகி வருகிறது.




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண