பிரபாஸ்


பான் இந்திய நடிகர் பிரபாஸ்  நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகியது. இந்தப் படத்திற்கு தி ராஜா சாப் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மாருதி இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். ஹாரர் திரைப்படமாக இந்தப் படம் உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ராஜா சாப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரில் பிரபாஸின் பெயர் ஆங்கிலத்தில் prabhas என்பதற்கு பதிலாக prabhass என்று இடம்பெற்றுள்ளது. கடைசியில் கூடுதலாக இடம்பெற்றிருக்கும் அந்த s  கவனக்குறைவால் ஏற்பட்டதாக முதலில் ரசிகர்கள் கருதினார்கள்.


ஆனால் இது பிழையில்லை பிரபாஸின் பெயர் நியூமாரலஜி பார்த்து மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


என்ன காரணம் ?


பிரபாஸ் நடித்து வெளியான ராதே ஷியாம் படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து சுமார் 500 கோடிக் செலவில் எடுக்கப் பட்ட ஆதிபுருஷ் படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அடிவாங்கியது. கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது சலார் திரைப்படம்.


3 ஆண்டுகளாக ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த சலார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பிரபாஸுக்கு பாலிவுட்வில் இருந்த மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பிரபாஸ் நியூமராலஜிப்படி தனது பெயரை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.






கல்கி 2898






தற்போது பிரபாஸ்  நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 படத்தில் நடித்து வருகிறார். வைஜெயந்தி மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் நிலையில் அமிதாப் பச்சன் ,  ராணா டகுபதி , தீபிகா படுகோன் மற்றும் கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். புராணக் கதைகளை மையமாக வைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகி வரும், கல்கி 2898 வரும் மே 9-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் தகவல் வெளியிட்டிருந்தது. 




மேலும் படிக்க :  Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!