சலார்


‘சலார்’. கேஜிஎஃப் பாகங்களை இயக்கி கன்னட சினிமாவை தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரஷாந்த் நீல். கன்னட சினிமாவின் மார்க்கெட்டையே அடுத்த தளத்துக்கு உயர்த்திய பிரஷாந்த் நீலின் அடுத்த படமான சலாரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். கேஜிஎஃப் பாகங்களைத் தொடர்ந்து மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்து டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது.  இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க, நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.


ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சலார் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி  சலார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தெரியவந்துள்ளது. இதனால் கேஜிஎஃப் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் காணப்படுகிறார்கள்.


சலார் அப்டேட்ஸ்


சலார் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ப்ரித்விராஜின் ஃபர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது.