பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக இருக்கும் "வக்கீல் சாப் " திரைப்படம் யூ ட்யூப்பில் ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது.

பவன் கல்யாண் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ’வக்கீல் சாப்’. இது பாலிவுட்டின் பிங்கின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பவன் கல்யாணின்  திரைப்படம் வெளியாகவுள்ளது . இந்தியில் "பிங்க் " திரைப்படம் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தமிழிலும்  இந்தப் படம்  ’நேர்கொண்ட பார்வை’ என்று ரீமேக் செய்யப்பட்டது .

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  தெலுங்கிலும் இந்த படத்தை ரீமேக் செய்துள்ளனர். "வக்கீல் சாப்” ட்ரெய்லர் இப்போது யூ ட்யூப்பில் சமீபத்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் இதுபோன்ற சாதனை இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. வக்கீல் சாப் டிரெய்லர் வெளியாகி 24 மணிநேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் மற்றும் 22.44 மில்லியன் வியூஸ்களை பெற்றது. இதற்கு முன்பு பாகுபலி 2 - 497 லீக்ஸ் மற்றும் 21.8 மில்லியன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

Idhi maamul vishayam kaadhu! 🙌🤗#VakeelSaab #VakeelSaabTrailer https://t.co/Lqme4mOtp1
— Nivetha Thomas (@i_nivethathomas) March 30, 2021

இதன் வெற்றியை படத்தின் நாயகி நிவேதா தாமஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வக்கீல் சாப் படம் வரும் ஏப்ரல் 9 வெளியாக காத்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு படம்  வெளியாவதால் பவன் கல்யாண் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் .