சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 162க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.33 ஆயிரத்து 296க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.64 உயர்ந்து, ரூ.4 ஆயிரத்து 226க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சவரன் ரூ.512 உயர்ந்து 33 ஆயிரத்து 808க்கு விற்பனை செய்யப்படுகிறது.




இதேபோல, வெள்ளி விலையும் இன்று உயர்ந்து காணப்பட்டது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67.60க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 90 பைசா உயர்ந்து ரூ.68.50க்கு விற்கப்படுகிறது. இதேபோல, நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.67,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ.900 உயர்ந்து 68,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.