வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் டைட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, நடிகர் அஜித்தின் புகைப்படங்களும் படக்குழுவால் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வைரலாக்கப்பட்டது. இதையடுத்து, துணிவு திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் வாரிசு படம் தொடர்பாக விளம்பரம் செய்து வரும் சூழலில் அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு வித்தியாசமான விளம்பரங்கள் செய்து கவனம் பெற செய்துள்ளனர். “ஒருவருக்கு பின்னால் நிற்பவன் அல்ல முன்னாள் துணிவுடன் முன்னாள் நிற்பவன்" என்ற வசனத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன், நடிகர் அஜித் உரையாடுவது போல புகைப்படத்துடன் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தாசில்தாரை தாக்கிய வழக்கு: மு.க. அழகிரி உள்ளிட்ட 20 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்