நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை மாளவிகா மோகனன் நயன்தாராவை கேலியாக பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Continues below advertisement

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள படம் ‘கனெக்ட்’. அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்த ஹாரர் திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இதனிடையே கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக, நேர்காணல் ஒன்றில் நயன்தாரா கலந்துகொண்டார்.

அதில், பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், சில விமர்சனங்கள் குறித்தும் பேசினார்.   “ஒரு காலகட்டத்தில் நான் கம்ப்ளீட் மேக் அப் போட்டு நடித்த படங்களும் இருந்தன. இது குறித்து விமர்சனமும் எழுந்துள்ளன. ஹீரோயின் ஒருவர் நேர்காணலின் போது மருத்துவமனையில் இருப்பதுபோன்ற ஒரு காட்சியில் நன்றாக மேக் அப் போட்டு கொண்டு முடியை நேர்த்தியாக வைத்து நடித்துள்ளேன் என கூறியிருந்தார். எனது பெயரை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், அவர் என்னை தான் குறிப்பிட்டு பேசியிருந்தார் என்பது எனக்கு புரிந்தது.

மருத்துவமனையில் இருக்கும்போது எப்படி அப்படி நடிக்க முடியும் என ஏதோ சொல்லியிருந்தார்.  மருத்துவமனை சீனில் நடிக்கும்போது பக்காவாக ட்ரஸ் பண்ணி இருக்க முடியாது தான் என்றாலும், அதற்காக முடியை விரிச்சு போட்டுக்கிட்டா நடிக்க முடியும். அதே போல கமர்சியல் திரைப்படங்கள் மற்றும் ரியலிஸ்டிக் திரைப்படங்களுக்கான தோற்றம் மாறுபடும். கமர்சியல் திரைப்படங்களில் அந்த அளவிற்கு சோகமாக நடிக்க வேண்டும் என இல்லை. இயக்குநர்கள் என்ன எதிர்பார்கிறார்களோ அதைத்தான் செய்ய வேண்டும்" என நயன்தாரா கூறியிருந்தார்.

நயன்தாரா எந்த நடிகையை குறிப்படுகிறார் என்பது நேற்று தெரியாமல் இருந்த நிலையில், இன்று ஒரு வீடியோ ட்விட்டரில் பரவி வந்தது. அந்த வீடியோவில், நடிகை மாளவிகா மோகனன், நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல், சூப்பர் ஸ்டார் என்று பெயரிட்டு கூறி விளக்கம் கொடுத்துள்ளார். 

உண்மையிலே, மாளவிகா மோகனனிடம் தமிழ் சினிமாவில் இடம்பெற்ற லாஜிக்கே இல்லாத சீன்கள் பற்றி சொல்லுங்க என நெறியாளர் கேட்டதற்கு, அந்த கேள்விக்கு ஏற்ற பதிலை கொடுத்தார் மாளவிகா . வைரலாகும் அந்த வீடியோவை அரையும் குறையுமாக பார்த்த சிலர், நயன்தாராவை மாளவிகா விமர்சித்து கலாய்த்துள்ளார் என நினைத்துக்கொண்டுள்ளனர். இதனால் “நீங்கள் மட்டும் என்ன மேக்-அப் போடாமல இருங்கீங்க” என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.