ஜானி சின்ஸ்
மொட்டை அடித்தாலே ஜானி சின்ஸ் மாதிரி இருக்க என்று பலர் சொல்வதை கேட்டிருக்கலாம். ஆம் பிரபல ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸை தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவரது நிஜப் பெயர் ஸ்டீவ் வூல்ஃப். ஆபாச பட நடிகர் மட்டுமில்லாமல் இவர் பிரபல யூடியூபரும் கூட. தனது 28 வயதில் ஜானி சின்ஸ் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆபாச படங்கள் தவிர்த்து தனது யூடியூப் சேனலில் பல ஜாலியான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 2024 ஆம் ஆண்டுவரை ஜானி சின்ஸ் 3000 ஆபாச படங்களுக்கு மேல் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஜானி சின்ஸ் உடலுறவு கொண்டவர்களின் எண்ணிக்கையை
பார்ன் துறையில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வரும் ஜானி சின்ஸ் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார். இதுவரை எத்தனை பேரும் உடலுறவு வைத்திருக்கிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பப் பட்டபோது அவர் கொடுத்த பதில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. " எத்தனை பேர் என்று நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் சுமார் 2500 நபர்கள் என தோராயமாக சொல்லலாம். " என அவர் கூறினார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது.
ஆபாசப் படங்கள் பார்ப்பவரையும் அவர்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ளவர்களையும் பல விதங்களில் பாதிக்கிறது. இத்துறையில் இருந்து மட்டும் உலகளவில் வருடத்திற்கு 100 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டப்படுகிறது. இப்படங்களில் நடிப்பவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகள் குறித்த பல்வேறு ஆவணப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.