2025-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கு (Commission Civil Services Examination) விண்ணபிக்க கால அவகாசம் பிப்ரவரி,21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஆட்சிப் பணிகளில் சேர நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தேர்வர்கள் விண்ணப்பிக்க பிப்.18 கடைசித் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 22ஆம் தேதி இவர்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. கால அவகாசம் மீண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையாம் 979 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.கல்வித் தகுதி பற்றிய முழு விவரத்திற்கு https://upsc.gov.in/exams-related-info/exam-notification - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான https://upsconline.gov.in/upsc/OTRP/ - ல் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்:

இதற்கான விண்ணப்பக் கட்டணம் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும்,  Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். அதேநேரம் பெண் தேர்வர்கள், பட்டியலின/  பழங்குடியினர் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

 முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வரும் மே 25ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.upsconline.nic.in- என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.02.2025 மாலை 6 மணி வரை 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி - 25.05.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/exams-related-info/exam-notification -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.