”ராஜ்கிரண் சாரால் அழுதுக்கிட்டே சாப்பிட்டேன்” - பூவே உனக்காக படத்தின் சங்கீதா சொன்ன தகவல்

”எல்லாமே என் ராசா தான் படத்தில் நடிக்கும்போது நான் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது நான் ரொம்ப சிறிய பெண்ணாக இருந்தேன். அதனால் எனது உடல் எடையை கூட்டி நடிக்க வேண்டும் என முடிவெடுத்தனர்”

Continues below advertisement

எல்லாமே என் ராசா தான் படத்தில் நடிக்கும் போது ராஜ்கிரணால் அழுத்ததாக நடிகை சங்கீதா கூறியுள்ளார். 

Continues below advertisement

90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சங்கீதா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சங்கீதா, என் ரத்தத்தின் ரத்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில், சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசா தான், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறி போச்சு, கங்கா கௌரி, வள்ளல் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கிய சங்கீதா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த நேர்க்காணலில் ராஜ்கிரண் உடன் நடித்தது குறித்து சங்கீதா பகிர்ந்துள்ளார். அதில், ”எல்லாமே என் ராசா தான் படத்தில் நடிக்கும்போது நான் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது நான் ரொம்க சிறிய பெண்ணாக இருந்தேன். அதனால் எனது உடல் எடையை கூட்டி நடிக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

அதற்காக டயட் இருக்க வைத்து எனது உடல் எடையை அதிகரிக்க செய்தார்கள். ஷூட்டிங்கில் ராஜ்கிரண் சார் அலுவலகத்தில் இருந்து சாப்பாடு வந்துவிடும். என்னை சாப்பிட சொல்லி வற்புறுத்துவார். அவித்த முட்டை, ஐஸ்கிரீம், மலைவாழை சாப்பிட வேண்டும் என சொல்லுவார்கள். ஆனால் நான் கொஞ்சமாக சாப்பிட்டதை பார்த்த அவர், நான் சாப்பிட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துவார். 15 ஆண்டுகளாக என் வீட்டில் எவ்வளவு வற்புறுத்தியும் சரியாக சாப்பிடாமல் இருந்த நான், ராஜ்கிரண் சாரால் சாப்பிட ஆரம்பித்தேன். 

சில நாட்கள் பெரிய கேரியரில் சாப்பாடு வரும். அதனால் அழுது கொண்டே சாப்பிட்டு இருக்கேன். கடைசியில் அந்த படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு கிராமப்புற மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது” என்றார். தொடர்ந்து விஜய் கூட பூவே உனக்காக படத்தில் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். விஜய் நடிப்பு, நடனம் என எல்லாமே தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், தன்னை பார்ப்பவர்கள் விஜய்யிடம் பேசுவீர்களா என கேட்பதாகவும் சங்கீதா கூறியுள்ளார். மேலும் விஜயகாந்த் பழகுவதில் மிகவும் மென்மையானவர் என்றும் சங்கீதா குறிப்பிட்டார்.  

 

மேலும் படிக்க: Actor Vijay: நடிகர் விஜயைப் பார்த்து திமுக பயப்படுகிறது - அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

Suriya: சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை பார்த்து அசந்துபோன விஜய்.. லோகேஷ் சொன்ன தகவல்!

 

Continues below advertisement