Pooja Hegde 10 years of cinema : "புட்ட பொம்மா..." ஹீரோயின் திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு
தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் ஒரே தெலுங்கு பாடல் மூலம் பட்டி தொட்டி எல்லாமே பிரபலமானவர் பூஜா ஹெக்டே. 'ஆளாவைகுந்தப்புரம்முலு' எனும் தெலுங்கு படத்தில் நடனத்தின் ராஜா என்று அழைக்கப்படும் தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்த இந்த சூப்பர் ஹிட் படத்தின் மிகவும் பிரபலமான பாடல் "புட்ட பொம்மா..." பாடலில் ஒரே ஸ்டெப்பில் உலகளவில் மிகவும் பிரபலமானார் பூஜா ஹெக்டே.
ஓவர் நைட் பிரபலம் :
அல்லு அர்ஜூனுடன் நடித்த இப்படம் அவர்களின் சிறப்பான நடிப்பால் சூப்பர் ஹிட் ஆனது. அதையும் தாண்டி "புட்ட பொம்மா..." பாடல் உலகளவில் ஹிட்டானது. இந்த பாடலை சிறு குழந்தைகள் முத பெரியவர்கள் வரை அனைவரையும் பாட வைத்து ஆடவும் வைத்து. திரைபிரபலங்கள் மட்டுமின்றி உலகத்தின் எல்லா முலைகளிலும் இருந்து மக்கள் ஆடின வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் வைரலானது.
ஆரம்பகால திரை வாழ்க்கை:
கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையில் நுழைந்தவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 2012ல் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் ஜோடியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானாலும் அடுத்தடுத்து தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து ஏரளமான ரசிகர்களை தான் வசம் கொண்டு வந்தவர். அதனால் அவரது கவனம் முழுவதுமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலேளேயே இருந்துள்ளது.
பீஸ்ட் மூலம் ரீ-என்ட்ரி :
தற்போது இனி தென்னிந்திய சினிமாவில் மட்டுமே நடிக்க போவதாக முடிவுஎடுத்துள்ளார். அதற்கு காரணம் தென்னிந்திய ரசிகர்களின் அன்பு மற்றும் அவர்கள் கொடுக்கும் மரியாதை பூஜாவிற்கு மிகவும் பிடித்துள்ளதாம். அப்படி அவர் கமிட்டான திரைப்படம் தான் இந்த ஆண்டு வெளியான "பீஸ்ட்". இளைய தளபதி விஜய் ஜோடியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ். அவ்வப்போது பல போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
10 ஆண்டுகள் நிறைவு:
பூஜா ஹெக்டே திரையுலகில் அடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. இவர் ஒரு பான் இந்திய நடிகையாக 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளார். இதுவரையில் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களிலும் நாக சைதன்யா, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி. ராமராவ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.
வரவிருக்கும் படங்கள் :
மேலும் பூஜா ஹெக்டே விஜய் தேவர்க்கொண்டவுடன் JGM படத்திலும், சல்மான் கானுடன் கபி ஈத் கபி தீவாளி, ரன்வீர் சிங் ஜோடியாக சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இனி அவர் மேலும் மேலும் பல வெற்றிகள் பெறவும் வளம் பெறவும் வாழ்த்துக்கள்.