தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பாடலான அரபிக்குத்து நேற்று வெளியானது. இந்த பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலே அனைத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடுவது போல வீடியோவை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரபிக்குத்து பாடல் ஏற்கனவே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது பூஜா ஹெக்டேவின் வீடியோவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சொகுசு படகு ஒன்றில் பின்னால் கடலின் அழகு தெரியும் வகையில் பூஜா ஹெக்டே நடிகர் விஜய் ஆடும் ஸ்டெப்பை ஆடுகிறார்.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். மேலும், டான்சிங் ரோஸ் புகழ் நடிகர், மலையாள நடிகர், நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணாதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த அரபிக்குத்து பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அரபிக்குத்து பாடலுக்கான அறிவிப்பு வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் செய்த ரகளைகளே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்