வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்து வரும் பொன்னியின் செல்வன் படம் வெளியாகவுள்ளது. இது ஒரு நாவலை தழுவிய கதை என்ற ஊருக்கே தெரியும். ஆனால், அந்த நாவலின் கதை, புத்தகத்தை படித்தவர்களுக்குதான் தெரியும். 2000 பக்கங்களை கொண்ட இந்த நாவல், மொத்தம் 5  பாகங்களை கொண்டது.


900 கிபி முதல் 950 கிபி வரை உள்ள காலகட்டத்தில், சோழா தேசத்தை ஆண்ட சுந்திர சோழர்( பிரகாஷ் ராஜ்) பற்றிய கதைதான் இது. உடல் நல குறைவால், படுத்த படுக்கையாக இருந்து வரும் சுந்தர சோழர், பழுவேட்டரையர் சகோதரர்களின் பிடியில் உள்ளார். இவர்களின் அனுமதியில்லாமல், அவரது சொந்த குடும்பத்தினர் கூட அவர்களின் அனுமதியின்றி சுந்தரரை சந்திப்பது கடினம். பெரிய பழுவேட்டரையர் ( சரத்குமார்) சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிபதி, இளைய சகோதரர் - சின்ன பழுவேட்டரையர் (பார்த்திபன்) - பேரரசர் தங்கியிருக்கும் தஞ்சை கோட்டையின் தலைமை தளபதி ஆவார்.




பழுவேட்டரையர் குலத்தினர், சோழர்களுக்கு தங்கள் விசுவாசத்தை போரில் நிரூபித்திருப்பதால், சுந்தர சோழர் அவர்களுக்கு சிறந்த  அந்தஸ்தினை கொடுத்திருப்பார். பேரரசர் மற்றும் அவரது ராணி வானவன் மகாதேவி  (வித்யா சுப்ரமணியன்) தம்பதிக்கு மூன்று குழந்தைகள். பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), இளவரசி குந்தவை (த்ரிஷா) மற்றும் இளவரசர் அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி). 



இதில், செம்பியன் மாதேவியின் (ஜெயசித்ரா) மகன் மதுராந்தகன் (ரஹ்மான்)  சுந்தருக்கு அடுத்து, பட்டத்து ராஜாவாக இருக்க வேண்டும் என்று ஆசை படுவார்.சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சயனின் மூத்த அண்ணன் தான் கண்டராதித்தன். கண்டராதித்தனின் மனைவிதான் செம்பியன் மாதேவி. இவர் இருவர்களுக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் அரிஞ்சயன் பட்டத்து ராஜாவாக ஆகிவிடுகிறார். அதற்கு அடுத்து அவரின் மகன் சுந்தரர் செங்கோல் ஆட்சி புரிகிறார்.


சோழர்கள், சைவர்களையும் வைணவர்களையும் சமமாகவே பார்த்தனர். செம்பியன் மாதேவியின் புதல்வனும் பக்திமானாக வளர்க்கப்பட்டான் ஆனால், அவனின் வாழ்கையை பல ஆசைகள் சூழ்ந்தது.



கதையில் இடம்பெறும் முக்கியமான இடங்கள் :


சுந்தர சோழர், தஞ்சை கோட்டையில் வசித்து வர,அவரின் மகள் குந்தவை பழையாறை மாளிகையில் குடி கொண்டு இருக்கின்றார். ஆதித்த கரிகாலனோ, காஞ்சியில் தங்க மாளிகை அமைத்து தன் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கிறான். அருண்மொழிவர்மன் அந்த சமயத்தில் இலங்கையில் மஹிந்த ராஜாவுடன் போர் புரிந்து கொண்டு இருப்பான். பழுவேட்டரையர்களின் பழுவூர், கடம்பூர் , குடந்தை போன்ற சிற்றசுகளின் பெயர்களும் இடம் பெற்று இருக்கிறது.



பொன்னியின் செல்வன் கதையின் கரு


சோழ நாட்டை ஆள கதைமாந்தர்கள் செய்யும் போராட்டமும், போரும் , வஞ்சமும் தான் இக்கதையின் கரு. கதையின் துவக்கத்தில் , வானில் ஒரு வால் நட்சத்திரம் தோன்றும். அது, சோழ குடும்பத்தின் முக்கிய தலையின் உயிரை கொள்ளவுள்ள அறிகுறியாய் விளங்கியது. சுந்தரர், நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றியிருப்பதால், அவர் இறந்து விடுவார் என்ற எண்ணம் நிலவி விரும்.




சுந்தர சோழனுக்கு அடுத்து ஆதித்த கரிகாலன்  முடி சூடவுள்ள நிலையில்,  பட்டத்து இளவரசன், அவனது வீரத்திற்காகக் கொண்டாடப்பட்டாலும், அதிக கோப சுபாவம் கொண்டவனாய்  இருக்கிறான். 


இவரது தம்பி அருண்மொழிவர்மன்,  நாட்டு மக்களுக்கு பிடித்தவனாக உள்ளான். அரசியலில் நுணுக்கமான அறிவுக்கு பெயர் பெற்ற இளவரசி குந்தவை, அருள்மொழி பெரிய சக்கரவர்த்தியாக வருவார் என்றும் நம்புகிறார். அவள் கொடும்பாளூர் குலத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள இளவரசி வானதியை (சோபிதா துளிபாலா) அருள்மொழிக்கு மணம் முடிக்க ஆசைபடுகிறாள்.


 




மதுராந்தகன், சுந்தர சோழர்களுக்கு பிள்ளைகளுக்கு மாமனாக இருந்தாலும், சுந்தரரின் பிள்ளைகளின் வயதும் மதுராந்தகனின் வயதும் கிட்டதட்ட ஒன்றுதான். மதுராந்தகன், சின்ன பழுவேட்டரையரின் மகளை மணந்தார். பழுவேட்டையர்களுமே, மதுராந்தகனை அரச பதவியில் வைத்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இது வெறும் ஆசையில்லை, மதுராந்தகன் அரசனானால், பழுவேட்டரையர்களுக்கு அது கூடுதல் பலமாக அமையும். இதுவே, அவர்களின் பின்ணனி ஆசை.


இதுயெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம், வீர பாண்டியனை கொன்ற ஆதித்த கரிகாலனை பழி வாங்க பாண்டிய சாம்ராஜ்ஜியமே காத்திருக்கும்.


வந்தியதேவன் யார் ?


 



வாணர் குலத்தை சேர்ந்த, வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் நெருக்கிய நண்பன். குந்தவையின் ஆசை காதலன். காஞ்சியில் இருந்து சுந்தர சோழருக்கு செய்தியை கொண்டு வரும் பொருட்டு தஞ்சைக்கு பயணிக்கிறான். அப்போது, இளைய பிராட்டிக்கும் இவருக்கும் காதல் மலர்கிறது.


இதில், ஆழ்வார்கடியான் நம்பி (ஜெயராம்) உடன் அடிக்கடி வாதத்தில் ஈடுபடுகிறான். ஆழ்வார்கடியான் சோழ நாட்டின் உளவாளி ஆவார். வந்தியத்தேவனின் பயணத்தில் பூங்குழலி எனும் படகோட்டி பெண் முக்கிய பங்கு வகிக்கிறார்.



முக்கிய வில்லி பற்றி தெரியுமா?



நந்தினி (ஐஸ்வர்யா) இக்கதையின், முக்கிய வில்லி ஆவார். சோழ நகரத்தில் உள்ள பெண்களில் அழகிய தோற்றம் கொண்டவர் நந்தினி. இவரின் அழகு வலையில் பார்த்தவுடன் சிக்கிய ஆடவர் பலர் உண்டு. கதையில் உள்ள பழுவேட்டரையர், கந்தமாறன், பார்த்திபேந்திர பல்லவன் ஆகிய சிலர் இதில் அடங்குவர். ஆனால், வந்தியத்தேவன் ஒருவனே, நந்தினியின் சுய ரூபம் அறிந்து, அவளின் அழகிற்கு மயங்காமல் அவளை விட்டு சற்று விலகியே இருப்பான்.




சிறுவயதில், ஆதித்த கரிகாலனோடு விளையாடி வரும் நந்தினியை, செம்பியன் மாதேவி சில காரணங்களுக்காக பிரித்து வைக்கிறார். ஆதித்த கரிகாலனும், நந்தினி மேல் சிறுவயதில் காதல் கொண்டான். இவரை பெரிய பழுவேட்டரையர் மணந்து கொள்கிறார். வயதில் மூத்தவரை இவர் மணந்ததற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
சோழர்களுக்கு நெருக்குமான பெரிய பழுவேட்டரையரை மணந்தாள்தான் அவர்களை அழிக்க முடியும் என்பதே நந்தினியின் வஞ்சம். 



பட டைட்டிலின் அர்த்தம் என்ன ?


பொன்னியின் செல்வன் என்றால் பொன்னியின் மகன் என்று அர்த்தம். ஐந்து வயதான அருண்மொழி தவறுதலாக பொன்னி நதியின் வீழுந்து விடுகிறான். இவனை காப்பாற்ற, அந்த பொன்னி நதியே காப்பாற்றியதால், அருண்மொழிக்கு பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டப்பட்டது.