“டிடின்னு பெயர் வந்தது இப்படிதான்.. இவர்தான் முதலில் அப்படி கூப்பிட்டார்” - நினைவுகளை பகிர்ந்த திவ்யதர்ஷினி!

தொகுப்பாளர்களுக்கே ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றால் அது திவ்யதர்ஷினி என்கிற டிடிக்கு மட்டும்தான்

Continues below advertisement

ரசிகர்கள் கோடானுகோடி பேர் இருக்கும் நடிகர்களை மேடையேற்றி வர்ணித்து அழகு பார்ப்பவர்கள் தொகுப்பாளர்கள். அப்படியான தொகுப்பாளர்களுக்கே ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றால் அது திவ்யதர்ஷினி என்கிற டிடிக்கு மட்டும்தான் இருக்கும். அண்மையில் டிடி ஃபேன்ஸ் மீட் நிகழ்வு நடந்தது. பிரபல யூட்யூப் சேனல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள் பங்கேற்று இருந்தனர். 

Continues below advertisement

”ஐ அம் ரெடி டு மீட் டிடி” என ரசிகர் ஒருவர் கவிதை எல்லாம் வாசிக்க விழா களைகட்டியது. இடையே தொகுப்பாளர் சில கேள்விகளையும் டிடியிடம் கேட்டார். 

”உங்களுக்கு டிடிங்கற பேரு எப்படி வந்துச்சு?”என தொகுப்பாளர் கேட்க...

“”ஸ்கூல் நாட்கள்ல ஸ்லாம் புக்ல பேரு எழுதின காலத்திலேர்ந்தே என்னை டிடின்னுதான் கூப்பிடத் தொடங்கினங்க. ஸ்லாம் புக்கில் திவ்யதர்ஷினிங்கற பெயர் நீளமா இருக்கும் அதனால் அதைச் சுருக்கிக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. என்னுடன் கோ ஆங்கராகப் பனியாற்றிய தீபக்குக்கு இது தெரியும். அவர் வேலையின்போது என்னை டிடி எனக் கூப்பிடத் தொடங்கியது பின்னர் எல்லோருக்கும் அதுவே பழகிவிட்டது” 


முடிஞ்ச வரைக்கும் யாரையும் பாதிக்காம பேசிட்டுப் போகனும் அதுதானே தொகுப்பாளருக்கு அழகு என பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருந்த டிடியிடம் அவர் காஃபி வித் டிடியில் தருவது போலவே மூன்று ரோஜாப்பூக்கள் தரப்பட்டன. ஒவ்வொரு ரோஜாவையும் அவர் யாருக்குத் தருவார் என்பதுதான் கேள்வி

“கர்மா இஸ் எ பூமராங் என சும்மாவா சொன்னாங்க... வெள்ளை ரோஸ் நட்புக்கானது..இதை யாருக்குத் தருவேன் என்றால் இன்டஸ்ட்ரியில் என்னுடன் சுமார் 17 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக இருக்கும் நெல்சன் மற்றும் ராஜ்குமார் இருவருக்கும். இருவருமே தற்போது படம் இயக்குகிறார்கள் ஆனால் அவர்களுடனான நட்பு அப்படியே இருக்கிறது” என்றார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola