பொன்னியின் செல்வன் படம், அனைவரின் எதிர்ப்பார்ப்பு படி இன்று வெளியானது. கல்கியின் நாவல் படி, மொத்தம் 5 பாகங்கள் உள்ளது. இப்படி பட்ட பெரிய கதையை எப்படி ஒரு படமாக எடுக்கமுடியும் என்று அனைவரின் மனதில் கேள்வி எழுந்தது. பாகுபலி இயக்குநர், ராஜமெளலி கூட எப்படி 140 நாட்களில் படப்பிடிப்பை முடித்தனர் என்ற ஆச்சர்யம் அடைந்தார்.


சரி, படத்தில் மணி என்ன செய்து வைத்திருக்கிறார் என்று பார்க்க போனால், நாடகம் போல் ஒவ்வொரு காட்சியையும் விரிவாக எடுத்து வைத்திருக்கிறார். சொல்லப்போனால்,நாவலின் முதல் பாகம் மட்டுமே முழுமையாக முடிந்துள்ளது, இரண்டாம் பாகத்தில் ஒரு சிறு பகுதி வரை மட்டுமே முடிந்து இருக்கிறது.






இன்னும் மூன்று பாகங்கள் உள்ள நிலையில், அடுத்த பாகத்தில் மீதி கதையை எப்படி முடிவு செய்வார்கள் என்ற எண்ணம் நிலவுகிறது. இந்த முழு படமே, வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் வழியே நகர்கிறது. அவன் யாரை சந்திக்கிறான் அங்கு நடப்பது என்ன, அடுத்தடுத்து அவன் செல்லும் இடங்களில் ஒவ்வொரு காட்சியும் விரிவாக எடுக்கப்பட்டுள்ளது. படம் பொருமையாக உள்ளது, லாக் அடிக்கிறது என்றெல்லாம் நிச்சயமாக சொல்ல முடியாது. வரலாற்றை தழுவி எடுக்கும் படங்கள் அனைத்தும் பொறுமையாகதான் செல்லும் அப்படி சென்றால்தான் முழு கதையும் அந்த கதையில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களின் தொடர்பான விவரமும் விளங்கும். 


அந்த வகையில், அதை அழகாக விளக்கி காட்சிபடுத்திருக்கிறார் மணி ரத்தினம். மீத கதையை காண, மக்கள்அனைவரும் அடுத்த பாகத்திற்காக  காத்திருக்க வேண்டும் என்பதுதான் கொஞ்சம் வருத்தமான விஷயம். பாகுபலி முதல் பாகத்தின் முடிவில், கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வி மட்டுமே இருந்தது. ஆனால் இந்த படத்தின் முடிவில் பல கேள்விகளும் குழப்பங்களும் சூழ்ந்துள்ளது.  கதை படித்த மக்கள் பொறுமையாக காத்திருக்கலாம்; ஆனால் கதை படிக்காதோர் சற்று கடுப்பாவார்கள். அதனால், படம் பார்க்க செல்வதற்கு முன்,பொன்னியின் செல்வன் நாவல் சுருக்கத்தை சற்று படித்து செல்லுங்கள்.அடுத்த பாகம் வருவதற்குள் மக்கள் நாவலை படித்துவிடுவார்கள் என்பது உறுதி.


மேலும் படிக்க : Ponniyin Selvan Summary : பொன்னியின் செல்வன் கதை சுருக்கம்... புத்தகம் படிக்காதவங்களுக்கு புரியும்!