பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் முக்கியமான ஒரு காட்சிக்கு பிறகு முடிந்து இருக்கும். அருண்மொழிவர்மன் (ஜெயம் ரவி) வல்லவரையன் வந்தியத்தேவனை (கார்த்தி) காப்பாற்ற பாண்டியர்களுடன் சண்டையிடுவார். இதில் இறுதியில், இரு வீரர்களும் மூழ்கியது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.


ஆனால், பொன்னியின் செல்வன் காப்பாற்றப்பட்டிருப்பார் என்பது கதை படித்தவர்களுக்கு தெரியும். அடுத்த பாகத்தில், அருண்மொழி வர்மன் உயிரோடு வருவாரா என்பது முக்கியமில்லை. அவரை காப்பாற்ற எப்போதும் காவலாக இருக்கும் ஊமை ராணி எனும் கதாபாத்திரம் யார் என்பதுதான் முக்கியம்.






கதையை படிக்காதவர்கள், படத்தின் இறுதி காட்சியில், நந்தினியின்(ஐஸ்வர்யா) வயதான வெர்ஷனை பார்த்திருப்பார்கள். சிலர், இது நந்தினியா என்ற குழப்பத்தில் இருந்தனர். சிறு வயதில், பொன்னி நதியில் விழுந்த அருண்மொழிவர்மனை காப்பாற்றிய அந்த ஊமை ராணிதான், பாண்டியர்களின் ”ஆபத்து உதவிகள்” தாக்கும்போது காப்பாற்றியது என்பதை அறிவோம்.


படத்தின் க்ளைமாக்ஸில், காண்பிக்கப்பட்டவரும் அந்த ஊமை ராணிதான். யார் இந்த ஊமை ராணி ஏன் அருண்மொழியை சுற்றிய அரணாக இவர் இருக்கிறார் என்பது சிலருக்கு விளங்காமல் இருக்கிறது.






யார் இந்த ஊமை ராணி :


சுந்தர சோழர் இலங்கை சென்றபோது, மந்தாகினி(ஊமை ராணி) எனும் பெண்ணுடன் வாழ்ந்து இரு பிள்ளைகளுக்கு தகப்பன் ஆகிறார். ஒரு குழந்தை நந்தினி மற்றொன்று சேந்தன் அமுதன். சில நாட்களுக்கு பிறகு சுந்தர சோழர் அவர் நாட்டுக்கு திரும்ப செல்ல, இரு குழந்தைகளும் காணாமல் போகின்றனர், இதனால் மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார் ஊமை ராணி. அதனால், ஊமை ராணி அருண்மொழியை தனது பிள்ளை என்று நினைத்துக்கொண்டு அவரை காப்பாற்றி வருகிறார்.


மேலும் படிக்க : Love Today: இதுவா 2k கிட்ஸின் காதல்...இளைஞர்களிடையே பேசுபொருளான “லவ் டுடே” ட்ரெய்லர்...!