Ponniyin Selvan IMAX: அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன், இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இதனை ஐமேக்ஸ் ஸ்கிரீனில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு, பொன்னியின் செல்வன் நாவலை வாசித்த வாசகர்களிடத்தில் மாபெறும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், படக்குழு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது படத்தின் மிகப் பெரிய திரையான ஐமேக்ஸ் ஸ்கிரீனிலும் படத்தினை வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐமேக்ஸ் ஸ்கிரீனில் படத்தினை ரிலீஸ் செய்வதால் நாவலை அதன் சுவை சொட்ட சொட்ட வாசித்த ரசிகர்களை வந்தியத் தேவன் பயணித்த பாதையான வடக்கே காஞ்சியில் இருந்து, பாழையாறை, இலங்கை, கோடியக்கரை வழியாக நாகப்பட்டினம், இங்கிருந்து மீண்டும் பாழையாறை என அனைத்து வரலாற்று இடங்களையும் தத்ரூபமாக ரசிகர்கள் உணர வேண்டும் எனும் நோக்கில் படக்குழு மிகவும் சிரத்தையுடன் இந்த படத்தினை உருவாக்கியுள்ளது. அத்தகைய உழைப்பினை ரசிகர்களிடத்தில் முழுமையாக கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில்   பொன்னியின் செல்வன் பத்தினை ஐமேக்ஸ் ஸ்கிரீனில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


மணிரத்னத்தின் கனவுப்படமான  ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1  செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 


பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது.


தமிழ்நாடு கடந்து பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியானது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, ஜெயராம், ஜெயம்ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அதனைத் தொடர்ந்து அதன் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது.


கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும்  முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.






2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம்  டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க  3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.