பொன்னியின் செல்வன் திரைப்படத்தை PS என குறிப்பிட கூடாது என இரு வழக்கறிஞர்கள் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 


அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி அதில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து திரையில் படமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். நேற்று உலகளவில் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் முதல் பாகம். இந்த சரித்திர காவியம் படத்தின் ரிலீசுக்கு முன்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும், மேலும் தூண்டியதால் படம் வெளியானவுடன் ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. கடைசி வரை விறுவிறுப்பாக நகர்ந்த திரைக்கதை சஸ்பென்ஸ் உடன் நிறைவு பெற்றுள்ளதால் அடுத்த பாகத்தின் ரிலீஸ் குறித்து இப்போதிலிருந்தே கேட்க துவங்கிவிட்டனர். 


 






 


விற்று தீர்ந்த முன்பதிவு:


புத்தகம் படித்தவர்கள் மட்டுமின்றி இதுவரையில் இந்த கதை பற்றி அறியாதவர்களுக்கு மிக எளிதாக புரியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டது சிறப்பு. கெட்டி மேளத்துடன் திரையிடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்பதிவுகள் பல நாட்களுக்கு முன்னரே விற்று தீர்ந்தது. இந்த படத்தினை ரசிகர்கள் ஒரு பண்டிகையை போல கொண்டாடி வருகிறார்கள். 


படம் வெளியான முதல் நாளே வசூலை வாரி குவித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள தமிழ் திரைப்படம் என சாதனை படத்தியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இது உலக நாயகனின் "விக்ரம்" படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.  


 


வக்கீல் நோட்டீஸ் காரணம் :


இப்படி கோலாகலமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் என்பதை சுருக்கமாக PS என குறிப்பிட்ட விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. கோவையை சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள் இனி PS என விளம்பரப்படுத்த வேண்டாம் என கூறி படக்குழுவினருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஐரோப்பிய நாட்களில் உள்ள ஒரு கிறிஸ்துவ அமைப்பை குறிக்கிறது PS என்பதால் இது மத ரீதியிலான போரை குறிப்பது போல் ஆகிவிடும் என்பதால் அதை பயன்படுத்த கூடாது என படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், வினியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.