இன்று இயக்குநர் மனிரத்னம் அவர்களின் பிறந்தநாள். பல்வேறு திரைப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த முக்கியமான நடிகர்கள் ஒருவர் கூட அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இன்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இயக்குனர் மனிரத்னம். சமூக வலைதளங்கள் மொத்தமும் ரசிகர்கள், திரைப்பட இயக்குநர்கள், மற்றும் நடிகர்கர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஆச்சரியப்படும்படியான விஷயம் என்னவென்றால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து எந்த கலைஞர்ரும் அவருக்கு பிறந்தநாள்  வாழ்த்துக்களைத் தெரிவிக்கவில்லை. இது இணையதளத்தில் பேசுபொருளாகி வருகிறது. ஒன்று இவர்கள் எல்லாரும் சேர்ந்து அவருக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டிருக்க வேண்டும்  அல்லது மனிரத்னம் பிறந்த நாள் கொண்டாடுவதில் அதிக ஈடுபாடு காட்டாதவர் என்பதை அவரது மாணவர்கள் என்கிற முறையில் நன்றாக அறிந்த இந்த நடிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதை தவிர்த்திருக்க வேண்டும். இதற்கு மேல் நாம் எதிர்பார்ப்பதற்கு வேறு ஏதாவது இருக்குமா என்ன..


பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய்,ஐஷ்வர்யா லக்‌ஷ்மி பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், பார்த்திபன்,ஷோபிதா என எக்கச்சக்கமாக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின்  படப்பிடிப்பின் போது இந்த ஒட்டுமொத்த குழுவும் மிக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். படப்பிடிப்புத் தளத்தின் எடுக்கப்பட்ட பல்வேறு நகைச்சுவையான வீடியோக்கள் இணையதளத்தின் வைரலாகின. தற்போது மணிரத்னத்தின் பிறந்தநாள் அன்று ஒருவர் கூட வாழ்த்துத் தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாய் இருக்கிறது.


பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் கிட்டதட்ட  அதன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூல் சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடக்காதது ஆச்சரியம்தான். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 140 கோடி வசூல் ஈட்டிய  பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தமிழகத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில்  ஏழாவது இடத்தில் உள்ளது.


இனி வரக்கூடிய நாட்களில் அதிகபட்சம் 2 கோடிகள் அதிகம் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் ஏழாவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்திற்கு செல்லும். பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழகத்தில் மட்டும் 222 கோடி வசூல் செய்திருந்த நிலையில் அதைவிட 40 கோடி குறைவாக இருந்த கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வசூல் செய்து 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த  இடத்தை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விக்ரம் படத்தை விட 40 கோடி ரூபாய் குறைவாகவே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வசூல் செய்துள்ளது.