தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம்  2  ஆவது வார திங்கள் கிழமையில் அதிக வசூல் செய்த படமாக மாறியிருக்கிறது. 


மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வசூல், படம் வெளியான இராண்டாவது திங்கள் கிழமையான நேற்றில் இருந்து குறைய தொடங்கி இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று மட்டும் இந்திய அளவில் 7.50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.


இந்த வசூல் இராண்டாம் வெள்ளிக்கிழமையில் வசூலான தொகையை விட, 45 சதவீதம் குறைவாகும். ‘பொன்னியின் செல்வன்’  வெளியான 11 நாட்களில் தோராயமாக  267 கோடி வசூலித்த நிலையில், இராண்டாவது வாரத்தை பொறுத்தவரை 4 நாட்களில் 62 கோடிகள் வசூலித்து, மொத்த வாரத்தில் 70 முதல் 80 கோடி வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 


இந்திய அளவில் பொன்னியின் செல்வன் வசூலித்த தொகை விபரங்கள்: 


இராண்டாம் வெள்ளிக்கிழமை: 13.75கோடி 


இராண்டாம் சனிக்கிழமை: 10.50கோடி 


இராண்டாம் ஞாயிறு: 21.25கோடி 


இராண்டாம் திங்கள்: 7.50 கோடி 


தமிழகத்தில் என்ன நிலவரம்? 


தமிழகத்தை பொருத்தவரை இராண்டாம் திங்களில் படமானது 5.50 கோடி வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் விக்ரம் திரைப்படம் இராண்டாம் திங்களில் வசூலித்த தொகையை முறியடித்து, இராண்டாம் திங்களில் அதிகம் வசூலித்த படமாக பொன்னியின் செல்வன் மாறியிருக்கிறது. தமிழகத்தில் 173 கோடி வசூல் செய்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ இன்னும் 9 கோடி வசூல் செய்தால் விக்ரம் படம் வசூலித்த தொகையை முறியடித்து விடும். இது வருகிற புதன் அல்லது வியாழன் நடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மொத்த வசூல் விபரங்கள் 


தமிழ்நாடு: 173.25கோடி 


ஆந்திரபிரதேசன்/  தெலங்கானா - 23.25 கோடி


கர்நாடகா- 24 கோடி
 
கேரளா - 21.25 கோடி 


வட இந்தியா -25.25 கோடி 


 


 


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 


கல்கியின்  ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்தப்படம் அந்தப்புத்தகத்தை படித்தவர்கள் மத்தியிலும், படிக்காதவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றாலும்,இன்னொரு தரப்பினர் படம் சுமாராகவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் படம் 200 கோடியை எட்டியதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படம் 300 கோடியை வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் படத்திற்கு செய்யப்பட்ட பிரோமோஷன்கள் எப்படியாவது படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில், சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து வருகின்றனர். 


இதனால் படத்திற்கு வசூல் குவிந்து வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் படம் குறித்தான வசூல் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதன் படி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 80 கோடி வசூல் செய்ததாகவும், தமிழகத்தில் மிக விரைவாக 100 கோடியை எட்டிய படமாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து உலக அளவில் படம் 300 கோடியை எட்டியதாக அறிவிக்கப்பட்டது.