தமிழகத்தையே எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக பொன்னியின் செல்வன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதனை முன்னிட்டு பொன்னியின் செல்வன் அப்டேட் வத வண்ணம் உள்ளது. அப்படி அப்டேட் வகையறாவாக மணிரத்னம் தனது ட்விட்டர் புரொஃபைல் படத்தை மாற்றினார். அதில் ஒரு காவிக் கொடி இருக்கிறது. அந்தக் கொடியை வைத்துதான் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதை முன்வைத்து மணிரத்னம் ஒரு வலதுசாரி. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர். தனது வெறுப்புணர்ச்சியை இப்பவே விதைக்க ஆரம்பித்து விட்டார் என தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த சண்டைக்கு தூபம் போட்டுவருகிறார் ப்ளூ சட்டை மாறன். இவர் அவ்வப்போது லடாய் இழுப்பது என ஆரம்பித்துவிட்டார். ஏற்கெனவே அஜித், விஜய், சூர்யாவை வம்பிழுத்தார். அத்துடன் நிறுத்தினாரா என்றால் இல்லை. சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சீனு ராமசாமி, விஜய்சேதுபதியை வம்பிழுத்தார். பிரபலங்களை வம்பிழுத்தும் பின்னர் அவர்களின் ரசிகர்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்வதும் ப்ளூ சட்டை மாறனுக்கு வழக்கமாகிவிட்டது. இதனால் லைம் லைட்டுக்காக அவர் இப்படி எல்லாம் செய்கிறார் என்ற விமர்சனமும் உள்ளது. மணிரத்னத்தை இவர் வம்பிழுப்பது இது முதன்முறையும் அல்ல. இதற்கு முன்னரும் கூட மணிரத்னத்தை பல முறை இவர் ட்ரோல் செய்துள்ளார்.
சர்ச்சையின் பின்னணி:
பொன்னியின் செல்வன் படம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்புடன் ஒரு மோஷன் போஸ்டர் வெளியானது. அதில், வருகிறான் சோழன் என்கிற வாசகத்துடன் கொடி ஒன்று ஒய்யாரமாக பறக்க, அதற்கு கீழ் ஆதித்த கரிகலானாக விக்ரம் உள்ளிட்ட சில வீரர்கள் நிற்கும் காட்சி சில் அவுட்டில் இடம்பெற்றிருந்தது. இதைவைத்து தான் ப்ளூ சட்டை மாறன் அரசியல் செய்கிறார். பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் காவிக் கலர் பேனரை கிழித்து விட்டு வருவார். அந்தக் காட்சியை போட்டு, பாஜகவுக்கு எதிரான காட்சி என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டிருப்பார். தற்போது இயக்குநர் மணிரத்னம் காவிக் கொடியை பறக்கவிட்டு இருக்கிறார் என்கிற ட்வீட்டை போட்டிருக்கிறார்.
நெட்டிசன்களும் இந்த வம்பிழுப்பை விட்டுவைக்கவில்லை. ப்ளூ சட்டை மாறனுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். ஏன் அது செங்கொடியாக இருக்கக் கூடாதா? விஷயம் தெரிவதற்கு முன் ஏன் விஷத்தை விதைக்கிறீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.
அதற்கு மாறன், நான் ஒன்றும் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் மணிரத்னம் இயக்குநர் மணிரத்னம் ஏற்கெனவே தன் படங்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை பதிவிட்டு, வலது சாரி சிந்தனையையும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையையும் விதைத்துள்ளார். காவிக் கொடியை காட்டி மீண்டும் அதே வேலையை பொன்னியின் செல்வன் படத்தில் செய்யப் போகிறார் என மணிரத்னத்தை சீண்டி உள்ளார். படம் வரட்டும் பார்த்துவிட்டு நல்லா இருக்கு, இல்லைன்னு விமர்சிக்கலாம். அதை விட்டு ஆரம்பத்திலேயே நெகட்டிவிட்டியை பரப்பும் உங்கள் புத்தியை விட்டுவிடுங்கள் என பலரும் அறிவுரை வழங்கியும் அசிங்கமாக திட்டியும் வருகின்றனர்.