கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் இன்று உலகமெங்கும் ரிலீசானது. மேலும் எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்பட்ட நிலையில் முன்னதாக படக்குழுவினர் கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர்.
வேடிக்கையான தலைப்புகளுக்கு பெயர் பெற்ற அமுல் பால் பிராண்ட், இப்போது இத்திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ஐஸ்வர்யா, த்ரிஷா, விக்ரம் மற்றும் கார்த்தியின் கதாபாத்திரங்களை டூடுல் பாணியில் இந்த வார்த்தைகள் பதித்து - "உங்கள் மணியின் மதிப்பைப் பெறுங்கள்!" மேலும் படத்தை 'மாஸ்டர் பீஸ்' என்றும் அமுலின் சமூக வலைதளங்களில் இப்புகைப்படத்திற்கு, "#அமுல் தலைப்பு: காவியப் படம், மணிரத்னம், பொன்னியின் செல்வன் வெளியிடப்பட்டது!" என்ற கேப்ஷன் போடப்படுள்ளது.
நெட்டிசன்கள் இதற்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினாலும், அவர்களில் சிலர் அருள்மொழி வர்மன் என்ற இளைய சோழ இளவரசனாக நடித்த ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தை விட்டுவிட்டதாகவும் சுட்டிக்காட்டினர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் முதல் நாளில் ரூ.33.4 கோடி வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 5 மொழிகளில் படம் வெளியான நிலையில் தமிழில் ரூ.23.6 கோடியும், பிற மொழிகளில் ரூ.9.8 கோடியும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.