sri reddy : 'என்னைக்கு டாப்பை கழட்டுனேனோ அன்னைக்கே எல்லாம் போச்சு..' மன உளைச்சலில் ஸ்ரீரெட்டி..!

தயவு செய்து கிளாமர் ரோலில் நடிக்க வேண்டும் என்று சினிமாவிற்கு வர வேண்டாம் என்று நடிகை ஸ்ரீரெட்டி அறிவுரை கூறியுள்ளார்.

Continues below advertisement

தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி  பல முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள் என்னை தவறான முறையில்  பயன்படுத்திக் கொண்டு கடைசியில் பட வாய்ப்பு கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.  அரை நிர்வாணமாக பொதுவெளியில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் சர்ச்சைக்குரிய வகையில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.

Continues below advertisement

இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் விஷால், நடிகர் ராகவா லாரன்ஸ் என கோலிவுட் பிரபலங்களின் பெயர்களும் இவரது புகார் பட்டியலில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனம் பெறும் நபராக மாறினார் ஸ்ரீரெட்டி. தற்போது இவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.


"என் அம்மா முன்னால கூட நான் ஆடை மாத்தமாட்டேன். அப்படிப்பட்ட நான் எல்லோருக்கும் முன்னால் ஆடையை கழற்றி போராட்டம் நடத்தும் பொழுது, என் வீட்டில் உள்ள அம்மா, அப்பா , தம்பி மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கும் பொழுது கஷ்டமாக இருக்கு. அவங்களுக்கு அவமானமா இருந்திருக்கும். என் கூட யாருமே பேசுறது கிடையாது.

என்னைக்கு என் டாப்பை கழட்டினேனோ அன்றைக்கே என்னுடைய மானம், அபிமானம் எல்லாமே போச்சு. நான் 20 - 25 பேர் கிட்ட ஏமாந்திருக்கேன். அவங்க எல்லோருமே சினிமாவில் மிகப்பெரிய இயக்குநர்கள் , நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் , எழுத்தாளர்கள். நான் நடிகைகளுக்கு சொல்வது ஒன்றுதான் கதாபாத்திரங்களுக்கு தேவை என்றால் மட்டும் நீங்கள் கவர்ச்சி காட்டுங்கள் , ஆடியோ விழா, ஃபோட்டோ ஷூட்டில் எல்லாம் அதீத கவர்ச்சி வேண்டாம். சின்ன வயசுல எந்த கவலையும் இல்லாம , அம்மா மேல படுத்து தூங்கும் அந்த தருணங்களை அடிக்கடி நினைத்து பார்ப்பேன். கிளாமர் ரோல்ல நடிக்கனும்னு யாரும் வராதீங்க..10 ஆயிரம் பேர்ல ஒருத்தர்தான் இங்க நிலைக்க முடியும். என் நிலைமையை முன் உதாரணமா எடுத்துக்கோங்க. பெரியவங்க சொல்லுறத கொஞ்சமாவது கேளுங்க “ என்றார் ஸ்ரீரெட்டி.

Continues below advertisement
Sponsored Links by Taboola