இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் கார்த்தி குறிப்பிட்டதாவது, “
எனக்கு குதிரைகள் மீது எப்போதுமே ஒரு வித காதல் இருந்திருக்கிறது. காஷ்மோரா படப்பிடிப்பின் போது குதிரை சவாரியை கற்றுக்கொண்டேன். பொன்னியின் செல்வன் படத்தில் நான் கனவு கண்டவற்றையெல்லாம் நான் வாழ்ந்தேன். கிட்டத்தட்டப் படம் முழுக்க நான் குதிரை மேலேதான் இருந்தேன். நீங்கள் குதிரையுடன் இணையும் போது, அதிலிருந்து வெளிப்படும் மூச்சும், இதயதுடிப்பும் தரும் உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக, ராஜராஜ சோழன் வாழ்கையை தழுவி, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆர், கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அதன் பொருட்செலவு காரணமாக எதுவும் சாத்தியப்படவில்லை. மணிரத்னமும் கடந்த 2011 ஆம் ஆண்டும் ஆர்யா, மகேஷ்பாபு உள்ளிட்டோரை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சி செய்தார். ஆனால் அது பலவித காரணங்களால் கைகூடாமல் போனது. இந்த நிலையிதான் விக்ரம்,கார்த்தி, ஜெயம்ரவி ஐஸ்வர்யாராய், த்ரிஷா என பெரும் நட்சத்திரபட்டாளத்துடன் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.
முன்னதாக படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பட வெளியீட்டு தேதியான 2022 (செப்டம்பர் 30) வெளியிடப்பட்டது. இதில் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.